கோவா ஆளுநர்களின் பட்டியல்
கோவா மாநில ஆளுநர் மாநிலத்தின் தலைமை பொறுப்பை 5 ஆண்டுகளுக்கு நிருவகிக்க இந்தியக் குடியரசுத் தலைவரால் அவரின் பிரதிநிதியாக செயல்பட 5 ஆண்டுகளுக்கொருமுறை நியமனம் செய்யப்படுகின்றனர். தற்பொழுதய கோவாவின் ஆளுநராக மேதகு சிவிந்தர் சிங் சித்து 21 ஜூலை 2008 முதல் பொறுப்பு வகிக்கின்றார்.
கோவா 30 ஜூலை 1987 க்கு முன்புவரை இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது அதன் பின் மாநிலமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கம் |
அதிகாரவரம்பு மற்றும் செயற்பாடுகள் [தொகு]
ஆளுநரின் அதிகாரங்கள் பல வகைகளில் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
- செயலாட்சி அதிகராங்கள் நிருவாகம், நியமனம் மற்றும் நீக்கல் அதிகாரங்கள்,
- சட்டமன்ற அதிகாரங்கள் மாநிலங்களின் சட்டமன்றம் மூலம் சட்டங்களை உருவாக்குதல். (சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற கீழவை)
- வரையறைக்குட்பட்ட அதிகாரங்கள் ஆளுநரின் அதிகார வரம்பிற்குள் (அ) வரையறைக்குட்படுத்தப்பட்ட அதிகாரங்களின்படி செயல்படும் அதிகாரங்கள்.
அலுவல்நிலை அதிகாரங்கள் [தொகு]
- ஆளுநர் அம்மாநில பல்கலைக்கழக வேந்தராக அவரின் அலுவல்நிலை அதிகாரங்களின்படியும், கோவா பல்கலைக்கழக சட்டம், 1984 இன்படியும் அப்பொருப்பை வகிக்கின்றார்.
- ஆளுநர் அலுவல்நிலை அதிகாரத்தின்படி (ex-officio-எக்ஸ் அபிசியோ) இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கோவா மாநிலக் கிளைத் தலைவராக பொறுப்பு வகிக்கின்றார். கோவா மாநில செஞ்சிலுவைச் சங்கத்தின் கூட்டத் தலைவர் (chairman-சேர்மேன்) மற்றும் சிறப்புச் செயலாளர்கள (Hon. Secretary-ஆனரரி செக்ரட்டரி) ஆளுநரால் தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
- ஆளுநர் கோவா மாநில சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் குழுத்தலைவராக செயல்படுகின்றார். இக்குழுவில் அரசு செயலர்கள் மற்றும் அரசு சாரா அலுவலர்கள் இடம்பெற்று ஆறு மாதத்திற்கொருமுறை இக்குழுக் கூட்டபெற்று கோவா மாநிலத்தின் சுற்றுச்சூழல், சூழிலியல் இவைகளை ஆராய்ந்து முடிவெடுக்கின்றது.
- ஆளுநர் ஒய்வுபெற்ற இராணுத்தினர், மற்றும் விதவைகளுக்கான மறுவாழ்வு நிதியத்தின் கூட்டத் தலைவராக செயல்படுகின்றார்.
கோவா முன்னாள் ஆளுநர்களின் பட்டியல் [தொகு]
போர்ச்சுகீசியத் தலைமை ஆளுநர்கள் [தொகு]
முதல் போர்ச்சுகீசியத் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) 1505 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கோ டி அல்மீதா வும் கடைசித் தலைமை ஆளுநராக மனுவல் அன்டோனியோ ஒசலோ இ சில்வா 1961 வரை பொறுப்ப வகித்தனர். கோவாவில் மொத்தம் 163 தலைமை ஆளுநர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். மொத்தப்பட்டியலைக் காண இத்தளத்தை தொடர்பு கொள்ளவும்; ராஜ்பவன் கோவா அரசு இணையம்.
துணைநிலை ஆளுநர்கள் [தொகு]
கோவா, தாமன் டையூ வுடன் இணைந்து இந்தியாவின் ஆட்சிப்பகுதியாக 30 மே, 1987 வரை செயல்பட்டது. அதுவரை அப்பகுதியை துணைநிலை ஆளுநர்களே கோவாவின் அட்சிபொறுப்பை ஏற்றிருந்தனர்.
| வ.எண் | துணைநிலை ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | கே.பி. கேன்டித் (இராணுவ ஆளுநர்) | 19 டிசம்பர் 1961 | 6 ஜூன் 1962 |
| 2 | டி. சிவசங்கர் | 7 ஜூன் 1962 | 1 செப்டம்பர் 1963 |
| 3 | எம்.ஆர்.சச்தேவ் | 2 செப்டம்பர் 1963 | 8 டிசம்பர் 1964 |
| 4 | ஹரி சர்மா | 12 டிசம்பர் 1964 | 23 பெப்ரவரி 1965 |
| 5 | கே.ஆர். டம்லே | 24 பெப்ரவரி 1965 | 17 ஏப்ரல் 1967 |
| 6 | நகுல் சென் | 18 ஏப்ரல் 1967 | 15 நவம்பர் 1972 |
| 7 | எஸ்.கே. பானர்ஜி | 16 நவம்பர் 1972 | 15 நவம்பர் 1977 |
| 8 | பி,எஸ். கில் | 16 நவம்பர் 1977 | 30 மார்ச் 1981 |
| 9 | ஜக்மோகன் | 31 மார்ச் 1981 | 29 ஆகஸ்டு 1982 |
| 10 | ஐ.எச். லத்திப் | 30 ஆகஸ்டு 1982 | 23 பெப்ரவரி 1983 |
| 11 | கே.டி. சத்தரவாலா | 24 பெப்ரவரி 1983 | 3 ஜூலை 1984 |
| 12 | ஐ.எச். லத்திப் | 4 ஜூலை 1984 | 23 செப்டம்பர் 1984 |
| 13 | கோபால் சிங் | 24 செப்டம்பர் 1984 | 29 மே 1987 |
1987 க்குப்பின் பொறுப்பேற்ற ஆளுநர்கள் [தொகு]
கோவா 1987 முதல் ஆட்சிப்பகுதியிலுருந்து மாநிலமாக அறிவிக்கப்பட்டது அதுமுதல் பொறுப்பேற்ற மாநில ஆளுநர்கள்;
| வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | கோபால் சிங் | 30 மே 1987 | 17 ஜூலை 1989 |
| 2 | குர்ஷத் ஆலம் கான் | 18 ஜூலை 1989 | 17 மார்ச் 1991 |
| 3 | பானு பிரக்காஷ் சிங் | 18 மார்ச் 1991 | 3 ஏப்ரல் 1994 |
| 4 | பி. ராச்சையா | 4 ஏப்ரல் 1994 | 3 ஆகஸ்டு 1994 |
| 5 | கோபால ராமானுஜம் | 4 ஆகஸ்டு 1994 | 15 ஜூன் 1995 |
| 6 | ரோமேஷ் பண்டாரி | 16 ஜூன் 1995 | 18 ஜூலை1996 |
| 7 | பி.சி. அலெக்சாண்டர் | 19 ஜூலை 1996 | 15 ஜனவரி 1998 |
| 8 | டி.ஆர். சத்தீஷ் சந்திரன் | 16 ஜனவரி 1998 | 18 ஏப்ரல் 1998 |
| 9 | ஜே.எப்.ஆர். ஜேக்கப் | 19 ஏப்ரல் 1998 | 26 நவம்பர் 1999 |
| 10 | முகம்மது பசூல் | 26 நவம்பர் 1999 | 25 அக்டோபர் 2002 |
| 11 | கிதார் நாத் சகானி | 26 அக்டோபர் 2002 | 2 ஜூலை 2004 |
| 12 | முகம்மது பசூல் | 3 ஜூலை 2004 | 16 ஜூலை 2004 |
| 13 | எஸ்.சி. ஜமீர் | 17 ஜூலை 2004 | 21 ஜூலை 2008 |
| 14 | சிவிந்தர் சிங் சித்து | 21 ஜூலை 2008 | 29 ஏப்ரல் 2012 |
| 15 | பி. வி. வாஞ்சூ | 29 ஏப்ரல் 2012 | தற்பொழுது கடைமையாற்றுபவர் |