கோவாரியா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கோவாரியா | ||
|---|---|---|
| நாடுகள்: | பாகிஸ்தான் | |
| பகுதி: | சிந்து மாகாணம் | |
| பேசுபவர்கள்: | 25,000 | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்திய-ஈரானியம் இந்திய-ஆரியம் நடு வலய இந்திய-ஆரியம் ராஜஸ்தானி கோவாரியா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | inc | |
| ISO/FDIS 639-3: | gig | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
கோவாரியா மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில், ராஜஸ்தானி மொழிகள் பிரிவைச் சேர்ந்தது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வாழும் சுமார் 25,000 பேர் இம் மொழியைப் பேசி வருகிறார்கள். இவர்கள் இம் மாகாணத்தின் லர்க்கானா, சுக்கூர், மோரோ, பாதின், உமர்கொட் ஆகிய பகுதிகளில் கூடுதலாக வாழுகின்றனர். பெரும்பாலும் இந்துக்களான இவர்கள், வழிபாட்டுக்கு இந்தி மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
இது இந்தியாவில் கவாரி மொழியை ஒத்ததாகக் கருதப்படுகிறது. ஜோகி, மார்வாரி மேக்வார் ஆகியவை நெருங்கிய கிளை மொழிகளாகும்.