கோல்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோல்டான் (Coltan) என்பது கொலம்பைட்டு-டாண்ட்டலைட்டு ஆகிய கனிமங்களின் கலவை ஆகும். இதிலிருந்து தான் நியோபியம் (முன்னர் கொலம்பியம் என்ற பெயரிடப்பட்டிருந்தது) என்ற தனிமமும் டாண்ட்டலம் என்ற தனிமமும் பிரித்தெடுக்கப் படுகின்றன[1]. கோல்டானிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டாண்ட்டலம் செல்பேசிகள், இறுவட்டு இயக்கிகள், காணொலி விளையாட்டு அமைப்புகள், கணினிகள் ஆகிய மின்னணுவியல் பொருள்களில் பயன்படுத்தப்படும் மின்னணுவியல் (மின்பகு/ஊசிமுனை) மின்தேக்கிகளைத் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன[2]. காங்கோ மக்களாட்சிக் குடியரசில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மோதல்களுக்குக் காரணமாகவும் அவற்றிற்கு பணமளிக்கும் மூலமாகவும் கோல்டான் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கோ போரில் 1998-இலிருந்து இதுவரை 69 இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புதவி[தொகு]

  1. Tantalum-Niobium International Study Center [1] பரணிடப்பட்டது 2010-10-28 at the வந்தவழி இயந்திரம்
  2. coltanweek.org [2] பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்டான்&oldid=3242395" இலிருந்து மீள்விக்கப்பட்டது