கோமாளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோமாளிகள்
இயக்குனர் எஸ். ராமநாதன்
தயாரிப்பாளர் எம். முகமட்
கதை எஸ். ராம்தாஸ்
நடிப்பு எஸ். ராம்தாஸ்
ரி. ராஜகோபால்
பி.எச். அப்துல் ஹமீட்
சுப்புலட்சுமி காசிநாதன்
சில்லையூர் செல்வராஜன்
கமலினி செல்வராஜன்
ஆனந்தராணி பாலேந்திரா(இராசரட்னம்)
எஸ். ஜேசுரட்னம்
கே. சந்திரசேகரன்
கே. ஏ. ஜவாஹர்
இசையமைப்பு கண்ணன் - நேசம்
ஒளிப்பதிவு ஜே. ஜே. யோகராஜா
படத்தொகுப்பு எஸ். இராமநாதன்
வெளியீடு 1976
நாடு இலங்கை
மொழி தமிழ்

கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன.


எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆன்ந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கெனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார்.


யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள்.


கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

குறிப்பு[தொகு]

  • சிங்களத் திரைப்படங்களில் பின்னணி பாடிய மொஹிதீன் பேக் முதன்முதலாக தமிழ்த் திரைப்படத்தில் பாடியது இத்திரைப்படத்தில் தான்.
  • 1995ல் வெளியான மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படத்தில், பிறப்பால் இஸ்லாமியரான நடிகர் நாசர் ஒரு இந்துவாகவும், இந்துவான நடிகர் சிட்டி இஸ்லாமியராகவும் நடித்தது சிறப்பாக பேசப்பட்டது. ஆனால் ஏற்கெனவே 1976ல் வெளியான கோமாளிகள் திரைப்படத்தில் இஸ்லாமியரான பி. எச். அப்துல் ஹமீட் இந்துவாகவும், பிறப்பால் இந்துவான எஸ். ராம்தாஸ் இஸ்லாமியராக அதாவது "மரிக்காராக"வும் நடித்திருந்தார்கள்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கோமாளிகள்&oldid=1417522" இருந்து மீள்விக்கப்பட்டது