கோனார்
கோனார் (ஆங்கிலம் Konar) Yadav) என்போர் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சமுதாயம் ஆகும்,இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள் ஆவர், தமிழ்நாட்டில் கோனார்,யாதவர்,கரையாளர் மற்றும் இடையர் என்றழைக்கபடுக்கிறார்கள், வடஇந்தியாவில் யாதவ் என்று அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின் யாதவர்களுக்கும் கலாச்சார பண்பாட்டு ரீதியில் தொடர்பு உண்டு.இவர்கள் ஆனாலும் ஆடு மாடு மேய்ப்பதையும், அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக் கறந்து விற்பதுமே இவர்களின் தொழிலாக இருக்கிறது. தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி. இவர்கள் பால் மற்றும் பால்பண்ணை சார்ந்த தொழில்களைச் செய்கின்றனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வழிபாடு
கிருஷ்ணர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களில் அநேகர் வைணவ வழியைப் பின்பற்றுகின்றனர்.
[தொகு] பெயர்காரணம்
`இடை' (நடு) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து `இடையர்' என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் `முல்லை' என்ற நடுக்காட்டில் புல்வெளி நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது.
விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு பிரிவினர்களுக்கு இடையே நடுவே ஒரு தொடர் கண்ணியாக இடையர்கள் இருந்ததால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது என்று பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இடையர்கள்தான் பிற்காலத்தில் தங்கள் பெயர்களுடன் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்துக்கொண்டுள்ளனர். 1891ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் `பிள்ளை, கரையாளர்' என்ற பட்டப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டது பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.
[தொகு] பாரம்பரியம்
இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் இருந்த சித்தர்களில் திருமூலர் மற்றும் இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் ஆயர் குலத்தை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்கள்.
அரசியலிலும் இலக்கியத்திலும் இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு உண்டு. தமிழகத்தில் பதிப்புத்துறை பெரிதும் வளர்ச்சியடையாத காலத்திலேயே மதுரையில் பதிப்புத் துறையில் ஈடுபட்ட இ.மா.கோபால கிருஷ்ணக்கோனார், ஆ.கார்மேகக் கோனார், பொன்னையக் கோனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
[தொகு] கல்வியாளர்கள்
- முனைவர்.ராமசாமி, துணைத்தலைவர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் மற்றும் முன்னாள் துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்
- முனைவர். திருவாசகம் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்
- காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன்
[தொகு] முக்கிய தலைவர்கள்
- முனைவர்.தி.தேவநாதன் - தலைவர் வின் டி.வி
- முனைவர்.கோபாலகிருஸ்ணன் -
[தொகு] திரை உலகினர்
- மாதவி - தென்னிந்திய நடிகை
- கஸ்தூரி - தென்னிந்திய நடிகை
- செந்தாமரை - தமிழ் திரையுலக நடிகர்
- ’என்னாத்த’ கண்ணையா (வரும் ஆனா வராது) - தமிழ் திரையுலக குணச்சித்திர நடிகர்
- சசிகுமார் - நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் (சுப்ரமணியபுரம்,சுந்தரபாண்டியன்)
- அர்ஜுன் - தென்னிந்திய நடிகர் [ஆதாரம் தேவை]
- 'கஞ்சா' கருப்பு - தயாரிப்பாளர்,காமெடி நடிகர்,குணச்சித்திர நடிகர்
- மனிஸா யாதவ் - தென்னிந்திய நடிகை (வழக்கு எண் 18/9)
- ரஜினி [ஆதாரம் தேவை]