கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்
| கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் | |
| — wildlife sanctuary — | |
|
IUCN Category IV (Habitat/Species Management Area)
|
|
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | Nagapattinam |
| Established | 1967 |
| அருகாமை நகரம் | Chennai (Madras) |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
21.47 square kilometres (8.29 ச மைல்) • 7 மீட்டர்கள்s (23 அடி) |
| தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
• 1,280 mm (50 in) |
| Visitation/year | |
| Governing body | Tamil Nadu Department of forests |
|
குறிப்புகள்
|
|
கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் 1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும். இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்ற விலங்குகளையும் காணலாம்.
பொருளடக்கம் |
தான்தோன்றிக் குதிரைகள் [தொகு]
ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டு பின்னர் விட்டுவிடப்பட்ட வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் அடங்காமல் சுற்றித்திரியும் தான்தோன்றிக் குதிரைகளாக மாறிவிட்டன. இத்தகைய குதிரைகள் இங்கு காணப்படுகின்றன.
1000 ஆண்டுகள் பழைமையான கலங்கரை விளக்கம் [தொகு]
இங்கு 1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையிற் காணப்படுகிறது.[1]
150 வகையான தாவரங்கள் [தொகு]
இப்பகுதியின் காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் ஆகும். இக்காப்பகத்தில் 150 வகையான தாவர வகைகள் காணப்படுகின்றன[2].
விலங்குகள் [தொகு]
இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு.
பல்வேறு வகையான பறவைகள் [தொகு]
இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன். பூநாரை போன்று பல்வேறு வகையான வட அரைக்கோளத்தை சேர்ந்த பறவைகள் ஆண்டு தோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இங்கு வலசை வருகின்றன. அண்டார்டிக்காப் பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன [3].
இதர விவரம் [தொகு]
இக்காப்பகம் சாலை வழியே நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு செல்வதற்கு நவம்பர் முதல் மார்ச், ஏப்ரல் வரை மிகவும் ஏற்ற காலமாகும்[4].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 BirdLife International Chitragudi and Kanjirankulam Bird Sanctuary
- ↑ http://www.forests.tn.nic.in/WildBiodiversity/ws_pcws.html
- ↑ http://thatstamil.oneindia.in/news/2007/12/04/tn-let-up-winged-visitors-coastal-sanctuary.html
- ↑ http://www.forests.tn.nic.in/WildBiodiversity/ws_pcws.html
படிமங்கள் [தொகு]
-
பருந்துப் பார்வையில் கோடியக்கரை
-
முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்