கோடபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோடபதி [1] என்பது ஒரு யாழுக்கு இடப்பட்டிருந்த பெயர். அது இந்திரன் மீட்டிய யாழ். இந்த யாழை மீட்டினால் அதன் இசைக்கு யானைகள் மயங்கும். இந்த யாழை இந்திரன் பிரமசுந்தர முனிவருக்கு வழங்கினான். அந்த முனிவர் அதனை உதயணனுக்கு வழங்கினார். உதயணன் அந்த யாழை மீட்டியபோது காட்டிலிருந்த தெய்வயானை என்னும் பெயர் கொண்ட களிறும், பல விலங்கினங்களும், பறவைகளும் இசையில் மயங்கி உதயணனின் வழிநின்றன.

அடிக்குறிப்பு[தொகு]

  1. =கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.  உ.வே.சா. முன்னுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடபதி&oldid=1535910" இலிருந்து மீள்விக்கப்பட்டது