கோக்குளமுற்றனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோக்குளமுற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன. அவை குறுந்தொகை 98, நற்றிணை 96

குளமுற்றம் என்பது ஓர் ஊர் என்பதை அரசன் பெயர் 'குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்' என்று கூறப்படுவதிலிருந்து அறியலாம். கோக்குளமுற்றம் என்பது குளமுற்றம் என்பது போல் வேறொரு ஊர். இந்தப் புலவர் அவரது ஊரின் பெயரால் குறிப்பிடப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோக்குளமுற்றனார்&oldid=2718019" இலிருந்து மீள்விக்கப்பட்டது