கொழுமம்
கொழுமம் | |||
— கிராமம் — | |||
அமைவிடம் | 10°28′56″N 77°21′45″E / 10.482242°N 77.362504°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருப்பூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | தா.கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
கொழுமம் (ஆங்கிலம்:KOLUMAM-(KOZHUMAM)) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்.[4][5] இந்தச் சிற்றூர் மடத்துக்குளம் வருவாய் வட்டத்தின் வருவாய் கிராமமான சங்கரராமநல்லூர் -கிழக்கு (கிராம எண்:37) இன் உட்கடை ஊர் ஆகும்.
பெயர் சிறப்பு[தொகு]
கொங்கு நாட்டில் வாழ்ந்த வள்ளல்களில் குமணவள்ளல் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் இவ்வூர் குழுவூர் என அழைக்கப்பட்டதாக இங்குள்ள கரிய வரதராஜபெருமாள் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.[6]
அமைவிடம்[தொகு]
பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் பழனியிலிருந்து சுமார் 20 கி.மீ.தூரத்திலும், உடுமலைப்பேட்டையிலில் இருந்து 18 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 405 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 6 கி.மீ தூரத்தில் ஐவர்மலை சமணர் குகைகள் அமைந்துள்ளது.
முக்கிய பயிர்[தொகு]
இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), கரும்பு, வாழை அதிகமாக விளைகின்றன. இது அமராவதியாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளதால் செழிப்பான நிலப்பகுதியாகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொழுமம் கிராமத்தில் 681 வீடுகள் உள்ளது. இவ்வூரில் 2654 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 1339,பெண்கள்1315 பாலின விகிதம் 982. எழுத்தறிவு பெற்றவர்கள் 1420 பேர். இதில் 829 பேர் ஆண்கள்; 591 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 61.08%. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 329 ஆண் குழந்தைகள் 174,பெண் குழந்தைகள் 155 ஆவர்.[7]
நிர்வாக அலகு[தொகு]
- மாவட்டம்: திருப்பூர்
- வருவாய் கோட்டம்: உடுமலைப்பேட்டை
- வட்டம்:மடத்துக்குளம்
- வருவாய் கிராமம்: சங்கரராமநல்லூர்-கிழக்கு
- ஊராட்சி ஒன்றியம்: மடத்துக்குளம்
- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து):சங்கரராமநல்லூர்.
வெளி இணைப்புகள்[தொகு]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04.
- ↑ கொழுமம், கொமரலிங்கம்- ஐவர்மலை-முனைவர். தி.மனோன்மணி- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு-2007-
- ↑ "Rural - Coimbatore District;Udumalpet Taluk;Kolumam Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.