கொளத்தூர், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கொளத்தூர் சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] அமைவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 19 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சென்னை புறநகர் பேருந்து நிலையம் 8 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கொளத்தூரை சுற்றி அமைந்துள்ள மற்ற பகுதிகள், பெரம்பூர், திரு.வி.கா நகர், வில்லிவாக்கம், புழல், ஜவகர் நகர், பொன்னியம்மன் நகர் மற்றும் பெரியார் நகர் ஆகும். கொளத்தூரின் அருகே வில்லிவாக்கம், பெரம்பூர் லோகோ, மற்றும் பெரம்பூர் புறநகர் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

[தொகு] நெடுஞ்சாலைகள்

கொளத்தூரின் அருகே கல்கத்தா செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் செல்லும் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை கடக்கும் இடத்தில் பாடி சந்திப்பில் ஒரு வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொளத்தூரை தொட்டுக்கொண்டு உள் வட்ட சாலை செல்கிறது. இச்சாலை வழியாக அண்ணா நகருக்கு வெறும் 10 நிமிடங்களில் செல்ல முடியும்.

[தொகு] அஞ்சல் குறியீட்டு எண்

கொளத்தூரின் அஞ்சல் குறியீட்டு எண் 600099.

[தொகு] பள்ளிக்கூடங்கள்

கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன

1) எவர்வின் மெட்ரிக் பள்ளி 2) தொன் போஸ்கோ உயர் நிலை பள்ளி, அண்ணா சிலை 3) சதீஷ் பாலாஜி மெட்ரிக் பள்ளி 4) பாலாஜி மெட்ரிக் பள்ளி

[தொகு] மருத்துவமனைகள்

கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட மருத்துவமனைகள் உள்ளன

1) DRJ மருத்துவமனை 2) க்ளூனி மருத்துவமனை

[தொகு] திரை அரங்குகள்

கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட திரையரங்குகள் உள்ளன.

1) கங்கா, காவேரி மற்றும் யமுனா

முன்னர் மூகாம்பிகை மற்றும் குமரன் திரையரங்குகள் இருந்தன. ஆனால் தற்போது அவை இடிக்கப்பட்டு அடுக்ககங்களாக மாறிவிட்டன.

[தொகு] வண்ண மீன்கள்

கொளத்தூர் வண்ண மீன் வளர்ப்பு மற்றும் விற்பனையில் தெற்காசியாவின் முக்கிய பங்களிப்பு மையமாக விளங்குகிறது. இங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் இன்ன பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வண்ண மீன்கள் ஏற்றுமதியாகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொளத்தூர்,_சென்னை&oldid=631988" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்