கொம்பு மனுக்கோடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொம்பு மனுக்கோடியா
Manucodia keraudrenii bis by Bowdler Sharpe.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முண்ணாணிகள்
வகுப்பு பறவை
வரிசை: பசெரீன்கள்
குடும்பம்: சந்திரவாசி
பேரினம்: மனுக்கோடியா
இனம்: M. keraudrenii
இருசொற்பெயர்
Manucodia keraudrenii
(லெசன் உம் கார்னொட்டு, 1826)
வேறு பெயர்கள்

Phonygammus keraudrenii Phonygama purpureoviolacea

கொம்பு மனுக்கோடியா (Manucodia keraudrenii) என்பது நடுத்தர அளவிலான, அதாவது கிட்டத்தட்ட 31 செமீ நீளமான சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இது கொம்புகள் போன்று நீண்டு வளர்ந்த தலையிறகுகளைக் கொண்டதாயும் செறிவு குறைந்த கழுத்திறகுகளைக் கொண்டதாயும் இருக்கும். கருநீலம், பச்சை மற்றும் ஊதா நிறத்தில் இதன் இறகுகள் காணப்படும். செந்நிறக் கண்களையும் நீண்டு வளைந்த மூக்குத் துவாரங்களையும் கருமையான சொண்டு, வாய் மற்றும் கால்களையும் கொண்டிருக்கும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பில் ஒத்திருப்பினும் பெண் பறவையானது ஆண் பறவையிலும் நிறம் மங்கியதாகக் காணப்படும். இப்பறவைகள் எழுப்பும் ஒலி ஊது கொம்புகள் மூலம் ஒலியெழுப்புவது போன்று மிகப் பெரிதாக ஒலிக்கும்.

கொம்பு மனுக்கோடியாப் பறவைகள் வடகிழக்கு ஆத்திரேலியா, நியூகினித் தீவு மற்றும் அதனை அண்டிய தீவுகளின் தாழ்நில மழைக்காடுகளில் நன்கு பரவிக் காணப்படும். ஏனைய மனுக்கோடியாக்களைப் போன்றே இவ்வினமும் தனியொரு பறவையுடன் மாத்திரம் கலவியில் ஈடுபடும்.

மேற்கோள்கள்[தொகு]

  • BirdLife International (2004). Manucodia keraudrenii. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 30 October 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.
  • Clench, Mary H. 1978. Tracheal Elongation in Birds-of-Paradise. Condor, 80(4):423-430.

வெளித் தொடுப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொம்பு_மனுக்கோடியா&oldid=1379270" இருந்து மீள்விக்கப்பட்டது