கொமொரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொமோரஸ் தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Union des Comores
Udzima wa Komori
الإتّحاد القمريّ
Al-Ittiād Al-Qumuriyy
கொமொரோசு ஒன்றியம்
கொமொரோசின் கொடி கொமொரோசின் சின்னம்
குறிக்கோள்
"Unité - Solidarité - Développement"  (பிரெஞ்சு)
"Unity - Solidarity - Development"
நாட்டுப்பண்
Udzima wa ya Masiwa  (Comorian)
"The Union of the Great Islands"

Location of கொமொரோசின்
தலைநகரம்
பெரிய நகரம்
மொரோனி
11°41′S, 43°16′E
ஆட்சி மொழி(கள்) கொமொரியம், அரபு, பிரெஞ்சு
அரசு கூட்டாட்சிக் குடியரசு
 -  அதிபர் அகமது அப்துல்லா எம். சாம்பி
விடுதலை பிரான்சு 
 -  Date யூலை 6 1975 
பரப்பளவு
 -  மொத்தம் 2,235 கிமீ² (178வது)
863 சது. மை 
 -  நீர் (%) சிறியது
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 798,000 (159வது)
 -  அடர்த்தி 275/கிமீ² (25வது)
712.2/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2004 கணிப்பீடு
 -  மொத்தம் $1.049 பில்லியன் (171வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $1,660 (156வது)
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.561 (மத்திம) (134th)
நாணயம் கொமொரிய பிராங்க் (KMF)
நேர வலயம் EAT (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.) கடைபிடிக்கப்படுவதில்லை (ஒ.ச.நே.+3)
இணைய குறி .km
தொலைபேசி +269

கொமொரோசு அல்லது அதிகாரப்பட்சமாக கொமொரோசு ஒன்றியம் இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் வட மடகசுகாருக்கும் வடகிழக்கு மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ள தீவுகளால் ஆன நாடாகும். மொசாம்பிக், மடகாஸ்கர், சிஷெல்ஸ், தன்சானியா என்பன கொமொரோசுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகளாகும். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்நாடு கொமொரோசு இசுலாமிய கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டு வந்தது. 2,235 சதுர கி.மீ. (863 சதுர மைல்)[1] பரப்பளவைக் கொண்டக் கொமொரொசு பரப்பளவின் படி ஆப்பிரிக்காவின் மூன்றாவது சிறிய நாடும் மக்கள்தொகை அடிப்படையில் ஆப்பிரிக்காவில் ஆறாவது சிறிய நாடுமாகும். இருந்த போதிலும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்திக் கூடிய நாடுகளில் கொமொரோசும் ஒன்றாக திகழ்கிறது. கொமொரோசு என்றப் பெயர் அரபு மொழியின் சந்திரனைக் குறிக்கும் பதமான கொமார் என்பதிலிருந்து தோன்றியதாகும்.[2]

நாடு அதிகாரப் பட்சமாக கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ள நிகசிட்சா (Ngazidja), மவாளி (Mwali), நிசவாணி (Nzwani) மவோரே (Mahoré) என்ற நான்கு முக்கியத் தீவுகளைடும் மற்றும் சில சிறிய தீவுகளையும் கொண்டது.[3][4] இருப்பினும் கொமொரோசு ஒன்றியமோ அல்லது அதற்கு முன்பிருந்த அரசுகளோ மவோரே தீவை ஆட்சி செய்யவில்லை. பிரான்சின் அடிமை நாடுகளாக கொமொரோசு இருந்தப்போது பிரான்சிடமிருந்து விடுதலையடைய வேண்டுமா எந்பதை அறிய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மவொரே தீவு விடுதலைக்கு எதிராக வக்களித்ததாலும், மவோரேயின் கட்டுப்பாட்டை கொமொரோசிடம் வழங்குவதற்கான ஐ.நா.வின் தீர்மானத்தை பிரான்சு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி[5][6] நிரகரித்தமையாலும் மவொரேயின் ஆட்சி கொமொரோசிடம் கையளிக்கப்படவில்லை.

கொமொரோசு பல காலாச்சராங்களில் கலப்புக் காரணமாக ஏற்பட்ட தேசியமாதாலால் கலாச்சாரப் பல்வகைமையைக் கொண்டுள்ளது. இங்கு கொமொரிய மொழி, பிரெஞ்சு மொழி, அரபு மொழி என்பன அதிகாரப்பட்ச மொழிகளாகும். இது ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக், இந்திய மாக்கடல் ஆணயம் போன்ற பன்னாட்டு அமைப்புகளிலும் அங்கத்தவராக உள்ளது.

உசாத்துணைகள்[தொகு]

  1. "UN Demographic Yearbook" (PDF).
  2. "Comores Online.com - reference to the history of the name".
  3. The first UN General Assembly Resolution regarding the matter, "Question of the Comorian island of Mayotte (PDF)," United Nations General Assembly Resolution A/RES/31/4, (21 October 1976) states "the occupation by France of the Comorian island of Mayotte constitutes a flagrant encroachment on the national unity of the Comorian State, a Member of the United Nations," rejecting the French-administered referendums and condemning French presence in Mayotte.
  4. As defined by the Organization of African Unity, the Movement of Non-Aligned Countries, the Organisation of the Islamic Conference, and the United Nations General Assembly: the most recent UN General Assembly Resolution regarding the matter, "Question of the Comorian island of Mayotte," United Nations General Assembly Resolution A/RES/49/18, (6 December 1994) states "the results of the referendum of 22 December 1974 were to be considered on a global basis and not island by island,...Reaffirms the sovereignty of the Islamic Federal Republic of the Comoros over the island of Mayotte". Several resolutions expressing similar sentiments were passed between 1977 (31/4) and 1994 (49/18).
  5. "Subjects of UN Security Council Vetoes". Global Policy Forum. பார்த்த நாள் 2008-03-27.
  6. "Article 33" (PDF). UN Treaty.


"http://ta.wikipedia.org/w/index.php?title=கொமொரோசு&oldid=1562798" இருந்து மீள்விக்கப்பட்டது