கொசு உள்ளான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொசு உள்ளான் Little Stint |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கோடையின் கடைசிப் பகுதியில் கொசு உள்ளான்
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Calidris minuta Leisler, 1812 |
||||||||||||||
| Synonyms | ||||||||||||||
|
Erolia minuta |
கொசு உள்ளான் (Little Stint) என்பது கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சார்ந்த ஒரு சிறிய பறவை. இது சிறிய, கூரான, கருமை நிறஅலகினையும் நடுத்தரமான நீளங்கொண்ட கருங்கால்களையும் உடையது; வேகமாக இயங்கக்கூடியது. ஆர்க்டிக் ஐரோப்பியப் பகுதிகளிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பனிக்காலங்களில் நெடுந்தொலைவு வலசை போகின்றன (migrate); பெரும்பாலும் ஆப்பிரிக்காவிற்கும் தெற்காசியப் பகுதிகளுக்கும் தான் இவை குடிபெயர்கின்றன.