கொங்கு நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொங்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
India Kongu Nadu locator map.svg

கொங்கு நாடு, தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், கேரளத்துடன் எல்லை கொண்ட வடகிழக்குப் பரப்பில் உள்ள ஆட்சிப் பகுதியாகும். இங்கு கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய தொழில் நகரங்கள் முக்கிய நகரங்கள் ஆகும். கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,நீலகிரி மற்றும் கரூர் மாவட்டதில் கரூர், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளையும், கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாயனூர், மனவாசி உள்ளிட்ட நான்கு கிராமங்களையும், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், கொடைக்கானல், திண்டுக்கல் பகுதிகளையும், வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதியையும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாத்ய் மலைப்பகுதி, விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது[1]. மேலும் கர்னாடக மாநில கொள்ளேகாலம், பண்டிபுரம், கேரள மாநில அட்டப்பாடி, கொழிஞ்சாம்பாறை, மறையூர் பள்ளத்தாக்கு ஆகியவையும் இதனுள் அடக்கம். கொங்கு என்ற சொல்லுக்கு கொங்கர்நாடு (கங்கநாடு), என்று பொருள்.

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

கொங்கு மண்டலத்தில் நடக்கும் திருமண நிச்சயதார்த்தத்தில் நடக்கும் சடங்குகள். கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வெற்றிலை பாக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகாமையில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - தருமபுரியின் அதியமான், கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கண்ணுவ குல மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் இப்பகுதி இருந்துள்ளது. தஞ்சைச் சோழர்களான இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது.பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்ச் சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்துவந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்கர்களின் ஆட்சிக்கு வந்தது.[2].கொங்கு நாட்டில் 17ம் நூற்றண்ட்டில் மதுரை நாயக்கர்களின் ஆளூமை 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.[2] தொடர்ந்து பாளையக்காரர்களின் கீழ் கொண்டு நாடு இருந்து வந்துள்ளது [3]

சங்க நூல்களில் கொங்கர் [தொகு]

'ஆ கெழு கொங்கர்' என்னும் பதிற்றுப்பத்து (22) பாடல் தொடர் ஆனிரைகளைப் பேணுவதில் கொங்கர்களுக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.

கயிறு குறு முகவை [தொகு]

கெட்டியான பாறைகளைக் கணிச்சியால் உடைத்து ஆழ்கிணறுகள் தோண்டுவார்கள். 'பத்தல்' என்னும் வாளியைக் கயிற்றில் கட்டி அக் கிணற்றில் நீர் இறைப்பார்கள். நீர் இறைக்கும்போது பாடிக்கொண்டே இறைப்பார்கள். தண்ணீரை முகந்து பாடுவதால் இப் பாட்டை 'முகவை' என்றனர்.

கொங்குநாட்டில் உள்ள மாவட்டங்கள் [தொகு]

உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்), கோயம்பத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், நாமக்கல் மாவட்டம், சேலம் மாவட்டம், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகள், திண்டுக்கல் மாவட்டதின் சில பகுதிகள், கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள்

மதுரை நாயக்கர்களின் பாளையகாரர் [தொகு]

கொங்கு நாட்டில் 17ம் நூற்றண்ட்டில் மதுரை நாயக்கர்களின் ஆளூமை 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

குறிப்புகள் [தொகு]

ஆதாரங்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கு_நாடு&oldid=1346573" இருந்து மீள்விக்கப்பட்டது