கே. சுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே.சுப்பையா (பி: 1928) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். சிங்காரவடிவேலன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியருமாவார். மேலும் இவர் நாளிதழ்களில் பகுதி நேர நிருபராகப் பணியாற்றியுள்ளதுடன், ம.இ.கா.வில் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், சிறுவர் பாடல்கள், நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "சிங்கார வடிவேலன் சிறுகதைகள்" (1988)
  • "ஜூலியஸ் சீஸர்" (நாடகம், 1996)
  • "சிறுவர் பாடல்கள்" (1996)
  • "தெலுக் கெமாங்கில் தேசியத் தலைவர்"
  • "சிரம்பானில் தேசியத் தலைவர்"

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • அரசாங்கத்தின் AMN, PJK, PMC, JP ஆகிய விருதுகள்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சுப்பையா&oldid=3241480" இலிருந்து மீள்விக்கப்பட்டது