கே. சுப்பிரமணியம்
| கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் | |
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 20, 1904 பாபநாசம், தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | ஏப்ரல் 7 1971 (அகவை 66) சென்னை |
| பணி | திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை வசன எழுத்தாளர் |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1931-1957 |
கிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் (Krishnaswami Subramaniam, ஏப்ரல் 20, 1904 – ஏப்ரல் 7, 1971) 1930களிலும், 40களிலும் புகழ்பெற்று விளங்கிய தமிழ்த் திரைப்பட இயக்குனர். பொதுவாக கே. சுப்பிரமணியம் என அழைக்கப்பட்டவர்.
வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]
கே. சுப்பிரமணியம் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞராக இருந்த கிருஷ்ணசுவாமி ஐயருக்குப் பிறந்தார். தந்தையைப் போலவே சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார்.
திரைப்படத் துறையில் [தொகு]
தமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரும், இயக்குனருமான ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். அவருடன் இணைந்து பேயும் பெண்ணும் (1930), அநாதைப்பெண் (1930), இராஜேஸ்வரி (1931), உஷாசுந்தரி (1931) ஆகிய ஊமைப் படங்களில் பணியாற்றினார். பின்னர் இராம அழகப்பச் செட்டியாருடன் இணைந்து மீனாட்சி சினிட்டோன் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து பவளக்கொடி என்ற தனது முதலாவது திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்திலேயே தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் அறிமுகமானார்கள். சுப்புலட்சுமியை பின்னர் கே. சுப்பிரமணியம் மணந்து கொண்டார். சாதி அமைப்பைச் சாடி பாலயோகினி (1937) என்ற திரைப்படத்தை எடுத்தார்.
வெளி இணைப்புகள் [தொகு]
- "தேசாபிமான" இயக்குநர் கே.சுப்ரமணியம், தினமணி, திசம்பர் 11, 2011