கேரள பாணினீயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள பாணினீயம் என்பது மலையாள மொழிக்கான இலக்கண நூலாகும். இதை ஏ. ஆர். இராஜராஜ வர்மா எழுதினார்.[1] இது 1896ஆம் ஆண்டில் வெளியானது.

மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு இலக்கண நூல்கள் இருந்தபோதும், பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் மலையாளத்துக்கு இலக்கண நூல்கள் இல்லை. இதை அறிந்த ஏ.ஆர். ராஜவர்மா, பாணினி எழுதிய பாணினீயத்தைப் போன்றே மலையாளத்துக்காக "கேரள பாணினீயம்" என்ற நூலை எழுதினார். இந்நூலில் மலையாளம் சமசுகிருதத்தில் இருந்து தோன்றியதல்ல என்றும், பழந்தமிழில் இருந்தே தோன்றியது என்றும் குறிப்பிடுகிறார். தமிழில் இருந்து பிரிந்து, மலையாளம் தனி மொழியானதற்கான ஆறு அடையாளங்களை நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

இதை முனைவர். இராய் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இது எட்டு பிரிவுகளைக் கொண்டது.

  • பீடிகை - மலையாள மொழி தோன்றிய வரலாறு, எழுத்துகள்
  • சந்தி பிரகாரம் - வாக்கிய அமைப்புகளும், சொற்கூட்டங்களும்
  • நாம அதிகாரம் - பால், உரிச்சொல் உள்ளிட்ட இலக்கணங்கள்
  • தாத்வ அதிகாரம் - எதிர்மன்ற வாக்கியங்கள், கூற்று வாக்கியங்கள், முன்னொட்டுகளும், பின்னொட்டுகளும், பெரிய வாக்கியங்கள்
  • பேத அதிகாரம் - உரிச் சொற்களைப் பற்றிய அதிக குறிப்புகள்
  • நிபாதாவ்ய அதிகாரம் - பல பொருள்களைக் கொண்ட சொற்கள்
  • ஆகாம்ஷ அதிகாரம் - இணைப்புச் சொற்கள்
  • சப்த உள்பத்தி - சொற்களை உருவாக்குவதைப் பற்றிய கட்டுரை

சான்றுகள்[தொகு]

  1. http://www.thehindu.com/news/cities/Kochi/a-royal-who-spoke-commoners-tongue/article4439819.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_பாணினீயம்&oldid=3241652" இலிருந்து மீள்விக்கப்பட்டது