கேப் டவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேப் டவுண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேப் டவுன்
Cape Town

காப்ஸ்டாட் (Afrikaans)
இக்காப்பா (Xhosa)
கடற்கரையில் இருந்து சமவெளிமுகட்டு மலை நோக்கிய கேப் டவுன் நகரின் தோற்றம்
கடற்கரையில் இருந்து சமவெளிமுகட்டு மலை நோக்கிய கேப் டவுன் நகரின் தோற்றம்
Official seal of கேப் டவுன்Cape Town
முத்திரை
சிறப்புப்பெயர்: தாய் நகரம், அல்லது The Tavern of the Seas
குறிக்கோளுரை: Spes Bona ("நன்நம்பிக்கை")
மேற்குக் கேப் மாகாணத்தில், கேப் டவுன் பெருநகரப் பகுதியின் அமைவிடம்.
மேற்குக் கேப் மாகாணத்தில், கேப் டவுன் பெருநகரப் பகுதியின் அமைவிடம்.
கேப் டவுன்Cape Town is located in South Africa
{{{alt}}}
கேப் டவுன்
Cape Town
தென்னாபிரிக்காவில் அமைவிடம்
அமைவு: 33°55′S 18°25′E / 33.917°S 18.417°E / -33.917; 18.417
நாடு தென்னாபிரிக்கா
மாகாணம் மேற்குக் கேப் மாகாணம்
மாநகரசபை கேப் டவுன் நகரம்
Founded 1652
அரசு [1]
 - வகை பெருநகர சபை
 - மேயர் ஹெலன் சில்லே
 - நகர முகாமையாளர் அக்மட் எப்ராகிம்
பரப்பளவு [2]
 - நகரம் 2,454.72 கிமீ²  (947.8 ச. மைல்)
மக்கள் தொகை (2007)[3]
 - நகரம் 34,97,097
 - அடர்த்தி 1,425/கிமீ² (3,690.7/ச. மைல்)
நேர வலயம் SAST (ஒ.ச.நே.+2)
Postal code 8000
தொலைபேசி குறியீடு(கள்) +27 (0)21
இணையத்தளம்: http://www.capetown.gov.za/

கேப் டவுன் (Cape Town) தென்னாபிரிக்காவில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது மேற்குக் கேப் மாகாணத்தின் தலைநகரமும், தென்னாபிரிக்காவின் சட்டவாக்கத் தலைநகரமும் ஆகும். இங்கேயே தேசிய நாடாளுமன்றமும், வேறு பல அரச அலுவலகங்களும் அமைந்துள்ளன. கேப் டவுன், இதன் துறைமுகத்துக்காகப் பெயர் பெற்றது. இது தென்னாபிரிக்காவின் மிகப் பெயர் பெற்ற சுற்றுலா மையமும் ஆகும்.

கேப் டவுன் தொடக்கத்தில், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியால், கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா, தூரகிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்குச் செல்லும் டச்சுக் கப்பல்களுக்கான வழங்கல் மையமாக உருவாக்கப்பட்டது. இது நிகழ்ந்தது சூயெஸ் கால்வாய் கட்டப்படுவதற்கு 200 ஆண்டுகள் முன்பாகும். தென்னாபிரிக்கவின் முதல் ஐரோப்பியக் குடியேற்றம், ஜான் வான் ரீபெக் என்பவரால் 1652 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் நிறுவப்பட்டது. கேப் டவுன் மிக விரைவிலேயே அதன் தொடக்க நோக்கத்துக்கும் மேலாக வளர்ச்சியடைந்தது. ஜொகானஸ்பர்க் நகரம் வளர்ச்சியடையும் வரை இதுவே தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமாகவும் இருந்தது.

2007 ஆம் ஆண்டின் சமுதாயக் கணக்கெடுப்பின்படி கேப் டவுனின் மக்கள்தொகை 3.5 மில்லியன் ஆகும். இதன் பரப்பளவான 2,455 சதுர மைல்கள், ஏனைய தென்னாபிரிக்க நகரங்களிலும் பெரியதாகும். இதன் விளைவாக இதன் மக்கள்தொகை அடர்த்தி, ஒப்பீட்டளவில் குறைந்த அளவான ஒரு கிலோமீட்டருக்கு 1,425 மக்கள் என்ற அளவில் உள்ளது. கேப் டவுன், பிரான்சின் நைஸ் நகருடனும், இஸ்ரேலின் ஹைஃபா நகருடனும் இணை நகரம் ஆக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pollack, Martin (2006-05-31). "Achmat Ebrahim is the new city manager of Cape Town". City of Cape Town Metropolitan Municipality. பார்த்த நாள் 2007-03-25.
  2. Municipal Demarcation Board, South Africa Retrieved on 2008-03-23.
  3. Statistics South Africa, Community Survey, 2007, Basic Results Municipalities (pdf-file) Retrieved on 2008-03-23.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கேப்_டவுன்&oldid=1641038" இருந்து மீள்விக்கப்பட்டது