கேதர்பேஜ் இணையதளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேதர் பேஜ் இணையத்தளம் (Gather Page) 2010 புரட்டாசி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மாணவர்களுக்கான ஒரு ஒரு கல்வி இணையதளம்.

இந்த இணையத்தளம் மாணவர்களின் சுய கற்றலினை ஊக்கப்படுத்தும் அதேவேளை அதிகளவான பயிற்சிகளை ஒவ்வொரு பாடத்திலும் வழங்கி மாணவர்களை ஒவ்வொரு பாடத்திலும் நிபுணத்துவம் பெறச் செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் பல பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில், தனியார் கல்வி நிலையங்களில் வழங்கப்படும் பாடக் குறிப்புக்கள், மாதிரி வினாவிடைகள், கடந்த கால பரீட்சை வினாவிடைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. மேலும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமக்குள் கருத்துக்களினை பரிமாறிக் கொண்டு தமது பாடரீதியான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளக் கூடிய வசதியும் உள்ளது.

பாடசாலை மாணவர்கள் தங்களின் அனைத்து பாடங்களின் பகுதி 1 இற்கான 40 கேள்விகளை உள்ளடங்கிய வினாத்தாள்களை இணையத்திலேயே பயிற்சி செய்யும் வசதி உள்ளது. ஒவ்வொரு பரீட்சையின் போதும் எழுந்தமானமாக 40 கேள்விகள் மாணவர்களுக்கு கிடைக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்காக செல்லும் மாணவர்களுக்குத் தேவையான விடயங்களும் இதில் தரப்பட்டுள்ளன. வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அவசியமான IELTS, TOFEL போன்ற பல பரீட்சைகளுக்கான தயார்படுத்தல்களுக்கும் இத்தளம் உதவுகிறது.

காணொளிகள் மூலமாகவும் ஒலிவடிவிலும் மாணவர்களுக்கு கணிணி மற்றும் ஆங்கிலக் கல்வி ஆகியவற்றை இலவசமாக இணையம் மூலம் கற்பிக்க இத்தளம் முயலுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதர்பேஜ்_இணையதளம்&oldid=3241580" இலிருந்து மீள்விக்கப்பட்டது