கேண்டெலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனைத்துலக அலகு (SI) முறையில் ஒளியின் அடர்த்தியை அளப்பதற்காண அடிப்படை அலகுக் கேண்டெலா ஆகும். (எத்தனை ‘அ’!!). (குறுகிய வடிவம், தமிழ் - கேண்டெ, ஆங்கிலம் - cd). இது ஒருக் குறிப்பிட்டத் திசையில் வெளிடப்படும் ஒளியின் ஆற்றலைக் குறிக்கும் அளவாகும். ஒரு கேண்டெலா என்பது ஏறக்குறைய மெழுகுத்திரி எரியும்போது வெளிப்படும் ஒளியின் அளவுக்குச் சமமாகும்.

வரையறை [தொகு]

எல்லா SI முறை அலகுகளைப் போல் இதற்கும் செயல்முறை வரையறை உள்ளது. 1979-ம் ஆண்டு நடைபெற்ற எடை மற்றும் அளவகளுக்கான பொது மாநாட்டைத் தொடர்ந்து ஒரு கேண்டெலாவிம் அளவு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:

ஒரு கேண்டெலா என்னும் ஒளியடர்த்தியானது, 540×1012 எர்ட்சு அதிர்வெண் கொண்ட ஒற்றை நிற ஒளி, ஒரு குறிப்பிட்டத் திசையில் 1/683 வாட்/இசுட்டெரேடியன் வீசும் கதிர்வீச்சு அடர்த்தி ஆகும். (இசுட்டெரேடியன் என்பது திண்மக் கோண ஆரையம்/ரேடியன் ஆகும்)

ஒரு கேண்டெ ஒளியை வெளிப்படுத்தும் கதிர்விளக்கை உருவாக்கும் முறையை இந்த வரையறை விளக்குகிறது. அந்தக் கதிர்விளக்கை மற்ற ஒளியளக்கும் கருவிகளை அளவுத்திருத்தப் பயனபடுத்தலாம்.

SI ஒளி அலகுகள் [தொகு]

அளவை ச.அ அலகு குறி குறிப்புகள்
ஒளி ஆற்றல் லூமென் நொடி லூம்-நொ talbots என்றும் அழைக்கப்படுகிறது
ஒளிச்சக்தி லூமென் லூ
ஒளியடர்த்தி கேண்டெலா கேண்டெ ச.அ அடிப்படை அலகு
ஒளிப்பரப்படர்த்தி கேண்டெலா/சதுர மீட்டர் கேண்டெ/மீ2 nits என்றும் அழைக்கப்படுகிறது
ஒளியாற்றல் அடர்த்தி லூமென்/சதுர மீட்டர் லூ/மீ2 பரப்பில் விழும் ஒளிக்குப் பயன்படுத்தப்படுவது
ஒளியாற்றல் வீச்சடர்த்தி லூமென்/சதுர மீட்டர் லூ/மீ2 கதிர்விளக்கு வெளிப்படுத்தும் ஒளிக்குப் பயன்படுத்தப்படுவது
ஒளி வீச்சாற்றல் லூமென்/வாட் லூ/வாட் ஒளி வீச்சடர்திக்கும் வீசு ஒளியாற்றல் திறனுக்குமான விகிதம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=கேண்டெலா&oldid=1352700" இருந்து மீள்விக்கப்பட்டது