கேசரிநாத் திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேசரிநாத் திரிபாதி
2016 இல் திரிபாதி
20-ஆவது மேற்கு வங்க ஆளுநர்
பதவியில்
24 சூலை 2014 – 29 சூலை 2019
முதலமைச்சர்மம்தா பானர்ஜி
முன்னையவர்த. எ. பாட்டீல்
பின்னவர்ஜகதீப் தன்கர்
பீகார் ஆளுநர்
(மேலதிகப் பொறுப்பு)
பதவியில்
20 சூன் 2017 – 29 செப்டம்பர் 2017
முதலமைச்சர்நிதிஷ் குமார்
முன்னையவர்ராம் நாத் கோவிந்த்
பின்னவர்சத்யபால் மாலிக்
பதவியில்
27 நவம்பர் 2014 – 15 ஆகத்து 2015
முதலமைச்சர்ஜீதன் ராம் மாஞ்சி
நிதிஷ் குமார்
முன்னையவர்த. எ. பாட்டீல்
பின்னவர்ராம் நாத் கோவிந்த்
மிசோரம் ஆளுநர்
(மேலதிகப் பொறுப்பு)
பதவியில்
4 ஏப்ரல் 2015 – 25 மே 2015
முதலமைச்சர்லால் தன்ஃகாவ்லா
முன்னையவர்அசிசு குரேசி
பின்னவர்நிர்பாய் சர்மா
14-ஆவது மேகாலய ஆளுநர்
பதவியில்
6 சனவரி 2015 – 19 மே 2015
முதலமைச்சர்முகுல் சங்மா
முன்னையவர்கிரிசான் காந்த் பவுல்
பின்னவர்வி. சண்முகநாதன்
உத்தரப் பிரதேச சட்டமன்ற சபாநாயகர்
பதவியில்
1991–1993
பதவியில்
1997–2004
தொகுதிஅலகபாத் தெற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-11-10)10 நவம்பர் 1934
அலகாபாத், ஐக்கிய மாகாணங்கள், இந்தியா
(now அலகாபாத், உத்தரப் பிரதேசம்)
இறப்பு8 சனவரி 2023(2023-01-08) (அகவை 88)
அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

கேசரிநாத் திரிபாதி (10 நவம்பர் 1934 – 8 சனவரி 2023)[1] இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநரும்[2] ஆவார். முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப்பேரவைத் தலைவராகவும் உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

தனி வாழ்க்கை[தொகு]

உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் நவம்பர் 10, 1934இல் பண்டிதர் அரீசு சந்திர திரிபாதிக்கும் திருமதி சிவ தேவிக்கும் மகனாகப் பிறந்தார். சுதா திரிபாதியை மணந்துள்ள இவருக்கு மூன்று மக்கள் உள்ளனர். இவர் அலகாபாத்தில் வசித்து வந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஐந்து முறை, 1977–1980, 1989-1991,1991-1992,1993-1995, 1996–2002, 2002–2007, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உ.பி சட்டப்பேரவைத் தலைவராக 1991–1993, 1997–2002 மற்றும் மே 2002 - மார்ச் 2004 காலங்களில் பொறுப்பாற்றியுள்ளார். 1977-1979இல் ஜனதா கட்சியின் உ.பி அமைச்சரவையில் நிறுவன நிதியம் மற்றும் விற்பனை வரி அமைச்சராகப் பணிபுரிந்துள்ளார். உ. பி. சட்டப்பேரவையின் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் மட்டுமே .[சான்று தேவை] சூலை 14, 2014 அன்று மேற்கு வங்காள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[2][3]

மற்றப் பணிகள்[தொகு]

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். எழுத்தாளரும் கவிஞருமான கேசரிநாத் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றில் முதன்மையானவை 'மனோனுக்கிருதி' மற்றும் 'ஆயு பாங்க் என்ற கவிதைத் தொகுப்புகளாகும். தொழில்முறையாக மக்கள் பிரதிநிதிகள் சட்டம், 1951 குறித்த இவரது விளக்கவுரை பெரிதும் அறியப்பட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் இந்திக் கவிஞர்களின் சம்மேளனங்களில் கலந்து கொள்கிறார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Former Bengal governor Keshari Nath Tripathi passes away
  2. 2.0 2.1 "New Governors of UP, Bengal, Chhattisgarh, Gujarat and Nagaland named". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2014.
  3. "உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்". தினகரன். 14 சூலை 2014. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசரிநாத்_திரிபாதி&oldid=3788906" இலிருந்து மீள்விக்கப்பட்டது