கெப்லர்-22பி
| புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
|---|---|---|
| தாய் விண்மீன் | ||
| விண்மீன் | கெப்லர்-22 | |
| சுற்றுவட்ட இயல்புகள் | ||
| சுற்றுக்காலம் | (P) | 289.9 [1] நா |
| இருப்புசார்ந்த இயல்புகள் | ||
| ஆரை | (r) | 2.4 [2] R⊕ |
| கண்டுபிடிப்பு | ||
| கண்டறிந்த நாள் | ||
| கண்டுபிடிப்பாளர்(கள்) | ||
| கண்டுபிடித்த முறை | கடப்பு முறை | |
| கண்டுபிடித்த இடம் | கெப்லர் திட்டம் | |
| கண்டுபிடிப்பு நிலை | வெளியிடப்பட்டது | |
| வேறு பெயர்கள் | ||
| Database references | ||
| புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் |
தரவு | |
| SIMBAD | தரவு | |
கெப்லர்-22பி (Kepler-22b) என்பது ஒரு புறக்கோள் ஆகும். எமது சூரியனைப் போன்ற உயிரினம் வாழக்கூடிய தொகுதியைக் கொண்டுள்ள விண்மீனைச் சுற்றிவரும் ஒரு புறக்கோள் இது. இவ்வகையான புறக்கோள் ஒன்று நாசாவினால் உறுதிப்படுத்தப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
இப்புறக்கோள் பற்றிய கண்டுபிடிப்பு 2011, டிசம்பர் 5 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது[3]. இக்கோளின் ஆரை பூமியுடன் ஒப்பிடும் போது ஏறத்தாழ 2.4 மடங்காகும். பூமியில் இருந்து 600 ஒளி ஆண்டுகள் தூரத்தில் கெப்லர் 22 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது[3][4]. இக்கோளின் மேற்பரப்பு எவ்வகையானது என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.[4][3]
கெப்லர்-22பி இற்கும் அதன் விண்மீனுக்கும் இடையேயான தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையான தூரத்துடன் ஒப்பிடும் போது 15% குறைவானதாகும். பூமியின் சுற்றுப்பாதையை விட 85% அதிகமானது. தனது விண்மீனை இது சுற்றிவர 289.9[5] நாட்கள் எடுக்கின்றது.[6]
கெப்லர்-22பி இன் விண்மீன் ஒளியை வெளிவிடும் அளவு எமது சூரியனை விட 25% குறைவாகும்.[3] இதன் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 22 செல்சியசு என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.[4][3]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://news.discovery.com/space/alien-planet-found-in-habitable-zone-111205.html
- ↑ Space.com, "NASA Telescope Confirms Alien Planet in Habitable Zone" 12/5/2011 http://www.space.com/13821-nasa-kepler-alien-planets-habitable-zone.html
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 BBC NEWS, "Kepler 22-b: Earth-like planet confirmed" 12/5/2011 http://www.bbc.co.uk/news/science-environment-16040655
- ↑ 4.0 4.1 4.2 NASA Press Release, "NASA's Kepler Confirms Its First Planet In Habitable Zone", 12/5/2011, http://www.nasa.gov/centers/ames/news/releases/2011/11-99AR.html
- ↑ http://news.discovery.com/space/alien-planet-found-in-habitable-zone-111205.html
- ↑ http://www.nasa.gov/mission_pages/kepler/news/kepscicon-briefing.html