கெப்லர்-16பி
| புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
|---|---|---|
கெப்லர்-16பி சுற்றி வருவது காட்டப்பட்டுள்ளது. |
||
| தாய் விண்மீன் | ||
| விண்மீன் | கெப்லர்-16 | |
| விண்மீன் தொகுதி | சிக்னசு | |
| தோற்ற ஒளிப்பொலிவு | (mV) | 11.5 |
| தொலைவு | 200[1] ஒஆ (61 புடைநொடி) |
|
| சுற்றுவட்ட இயல்புகள் Epoch BJD 2455212.12316 |
||
| அரைப் பேரச்சு | (a) | 0.7048 ± 0.0011 AU |
| மையப்பிறழ்ச்சி | (e) | 0.0069 ± 0.0015 |
| சுற்றுக்காலம் | (P) | 228.776 ± 0.037 நா |
| சாய்வு | (i) | 90.0322 ± 0.0023° |
| Longitude of the node | (Ω) | 0.003 ± 0.013° |
| Argument of periastron |
(ω) | 318 ± 22° |
| இருப்புசார்ந்த இயல்புகள் | ||
| திணிவு | (m) | 0.333 ± 0.015 MJ |
| ஆரை | (r) | 0.22623 ± 0.00059 RJ |
| மேற்பரப்பு ஈர்ப்பு | (g) | 14.52 ± 0.7 மீ/செ² |
| வெப்பநிலை | (T) | 170 - 200 கெ |
| கண்டுபிடிப்பு | ||
| கண்டறிந்த நாள் | 07.07.2011 | |
| கண்டுபிடிப்பாளர்(கள்) | லாரன்சு டொயில்[1] | |
| கண்டுபிடித்த முறை | கடப்பு முறை, (கெப்லர் திட்டம்) | |
| கண்டுபிடிப்பு நிலை | Published | |
| Database references | ||
| புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் |
தரவு | |
| SIMBAD | தரவு | |
கெப்லர்-16பி (Kepler-16b) என்பது ஒரு புறக்கோள் ஆகும். சனியைப் போன்ற கோளான இது பாதி வளிமத்தையும், பாதி திடப் பொருளையும் கொண்டது[2]. கெப்லர்-16 என்ற இரட்டைச் சூரியன்களை 229 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது[3]. இரட்டைச் சூரியன்களைச் சுற்றிவரும் கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்[4].
கெப்லர்-16பி என்ற இப்புறக்கோள் நாசாவின் கெப்லர் விண்கலத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[5]. சூரியக் குடும்பத்தின் விண்மீன்களில் ஒன்று மின்னி, மற்றொன்று அதன் ஒளியை மறைக்கின்றன என்பதை கடப்பு முறையில் காண்கையில் விஞ்ஞானிகள் அங்கிருக்கும் கோளை கண்டறிய முடிகிறது. கெப்லர்-16 அமைப்பில் உள்ள பொருட்களின் வடிவம் மற்றும் நிறைகளின் கணக்குகளை உயர் துல்லியமாய் அளவிட இந்தக் கோள் செய்யும் கடப்புகள் வித்திடுகின்றன. மவுண்ட் வியூ, காலிபோர்னியாவில் உள்ள எஸ்இடிஐ நிறுவனத்தின் கோள் கண்டறி குழுவின் தலைவர் லாரன்ஸ் தோயில் இதன் துல்லியத்தைப் பற்றி, "சூரியக் குடும்பத்திலேயே மிகச்சிறப்பாக அளவிடப்பட்ட கோள் இதுவே என்று நம்புகிறேன்" என்றார்.
கெப்லர்-16பி, இரட்டை விண்மீன் மண்டலத்தின் உள் சுற்றுப்பாதை ஆரம் என்று கருதப்பட்ட எல்லையயும் தாண்டி விழுவதும் இதில் வழக்கமற்றதாகவுள்ளது. மாசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் கோள்மேதை சாரா சீசர் கூறுகையில், இந்த கோள் இருக்கும் அமைப்பை பார்க்கும் பொழுது இதன் நிலையான சுற்றுப்பாதையானது, இரட்டை விண்மீன்களும் எவ்வளவு தொலைவில் உள்ளதோ அதைவிட ஏழுமடங்கு அதிக தொலைவில் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால் கெப்லர்-16பி அதில் வெறும் பாதித் தொலைவில் தான் உள்ளது என்றார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 வார்ப்புரு:Cite arXiv
- ↑ Drake, Nadia. "On Kepler-16b, shadows come in pairs". Science News. Society for Science & the Public. பார்த்த நாள் 16 September 2011.
- ↑ Doyle, Laurance (2011-09-15). "First Planet Orbiting Two Stars Discovered by the NASA Kepler Spacecraft". The Huffington Post. http://www.huffingtonpost.com/seti-institute/first-planet-orbiting-two_b_964604.html. Retrieved 16 September 2011.
- ↑ Baldwin, Emily. "Kepler planet circles two suns". Astronomy Now Online. Pole Star Publications Ltd.. பார்த்த நாள் 16 September 2011.
- ↑ Gold, Scott (2011-09-15). "Scientists find planet orbiting two suns like in 'Star Wars'". Los Angeles Times. http://www.latimes.com/news/local/la-me-double-sun-20110916,0,7303143.story. Retrieved 16 September 2011.
வெளி இணைப்புகள் [தொகு]
- Kepler-16 (AB) at The Extrasolar Planets Encyclopaedia
- Kepler-16: A Transiting Circumbinary Planet, Laurance R. Doyle et al. 2011
- Spin-Orbit Alignment for the Circumbinary Planet Host Kepler-16A , Joshua N. Winn et al. 2011