கூலும் விதி
1780 களில் சார்லசு அகுசிட்டின் டி கூலும் (Charles-Augustin de Coulomb) என்பவர் , மின்னூட்டங்களுக்கு ( மின்மங்களுக்கு) இடையேயான மின்னிலை விசையினை ஒரு சமன்பாடாக விளக்கினார்.கூலும் விதியின்படி ,
இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்னிலை விசையின் எண்ணளவானது , ஒவ்வொரு மின்னூட்டங்களின் எண்ணளவு பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவிலும் , அவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த் தகவிலும் அமையும் .
பொருளடக்கம் |
திசையிலி வடிவம் [தொகு]
கூலும் விதியின் திசையிலி வடிவம் மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின் விசையின் எண்ணளவை மட்டுமே விவரிக்கக் கூடும் . இவற்றின் திசை குறிப்பிட வேண்டுமானால் , திசையன் வடிவத்தை பின்பற்ற வேண்டும் . கூலும் விதிப்படி , r தொலைவில் உள்ள இரு மின்னூட்டங்களுக்கு ( q1 மற்றும் q2 ) இடையேயான நிலைமின் விசை F இன் எண்ணளவு கீழ் உள்ளவாறு இருக்கும் ,
இதில் நேர்விசை விரட்டுவதாகவும் , எதிர்விசை கவருவதாகவும் இருக்கும் . இதின் விகித மாறிலிக்கு Ke கூலும் மாறிலி என்று பெயர் . இது சுற்றுப்பரப்பின் தன்மையோடு தொடர்பு உடையது . இதை கீழ் உள்ளவாறு சரியாக கணக்கிடப்படும் ,
மின்புலம் [தொகு]
லாரன்சு விசை விதிப்படி , r தொலைவில் உள்ள ஓர்ப் புள்ளி மின்னூட்டத்தின் (q) மின்புலத்தின் எண்ணளவு (E) ,
திசையன் வடிவம் [தொகு]
r2 தொலைவில் உள்ள q2 மின்மத்தின் புலத்தை தொடுகிற , r1 தொலைவில் உள்ள q1 மின்ம விசையின் எண்ணளவு மற்றும் திசையை பெறுவதற்கு , திசையன் வடிவம் பின்வருமாறு விவரிக்கப் படும் ,
அட்டவணை [தொகு]
| துகள் பண்பு | தொடர்பு | புலப் பண்பு | |||||
| திசையன் கணியம் |
|
![]() |
|
||||
| தொடர்பு | ![]() |
![]() |
|||||
| திசையிலி கணியம் |
|
![]() |
|











