கூடியாட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டியாசிரியர் மாணி மாதவ சாக்கியாரின் இராமாயணம் நாடகத்தில் இராவணன் வேடம் கொண்டு, தமது 89ஆம் அகவையில் (வயதில்), திருபுனித்துரையில் கூடியாட்டம் நாடகம் ஆடுகிறார்
கூடியாட்டம் என்பது இன்றைய கேரளாவில் வழக்கில் இருக்கும் ஒரு மிகப் பழைய நாடக வகைகளுள் ஒன்று. இது இன்று சமஸ்கிருத மொழியில் நடைபெறுகிறது. இந்நாடகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்டதாக நம்பப்படுகின்றது. கேரளாவின் இக்கலை வடிவத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகின் தலைசிறந்த கலைவடிவங்களுள் ஒன்றாக, பேச்சுவழக்கிலும் வகைப்படுத்தவியலா வரலாற்று தொல்வழக்கானவற்றுள் ஒன்றாகவும் உள்ள செல்வம் என்றும் அறிவித்துள்ளது. (Masterpieces of the Oral and Intangible Heritage of Humanity) அறிவித்துள்ளது.