குவாண்டம் ஜிஸ்
| குவாண்டம் ஜிஐஎஸ் Quantum GIS |
|
|---|---|
குவாண்டம் GIS 0.8.0 டைட்டான் |
|
| உருவாக்குனர் | கியூ.ஜிஐஎஸ் உருவாக்கக் குழு |
| துவக்க வெளியீடு | சனவரி 2009 |
| பிந்தைய பதிப்பு | 1.8.0 (Lisboa) / சூன் 21, 2012 |
| நிரலாக்க மொழி | C++ |
| இயக்குதளம் | Cross-platform |
| வகை | புவியியல் தகவல் முறைமை |
| அனுமதி | ஜிபிஎல் |
| இணையத்தளம் | http://qgis.org/ |
குவாண்டம் ஜிஐஎஸ் (குவாண்டம் ஜிஸ், Quantum GIS) அல்லது கியூ.ஜிஐஎஸ் (கியூ.ஜிஸ், QGIS) என்பது புவிசார் தகவல்களை பார்க்கவும், தொகுக்கவும், அலசவும் மேற்கொள்ள பயன்படும் மேசைத்தள கணினிகளுக்கான ஒரு புவிசார் தகவல் கட்டகம் (GIS - Geographic Information System) மென்பொருள்.
பொருளடக்கம் |
உருவாக்கம்[தொகு]
குவாண்டம் ஜிஐஎசின் உருவாக்கம் 2002ஆம் ஆண்டின் முதல்சில மாதங்களில் கேரி செர்மன் என்பவரால் துவக்கப்பட்டது, அதன்பின் 2007ஆம் ஆண்டு அது திறாமூல புவியிட நிறுவனத்தின் (Open Source Geospatial Foundation) அடைகாப்புத் திட்டங்களில் ஒன்றானது. இதன் முதல் வெளியீட்டு பதிப்பு 1.0 (version 1.0) 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
கியூ.ஜிஐஎஸ், சி++ மொழியில் எழுதப்பட்டது. இதன் வரைபடப் பயனாளர் இடைமுகப்பு அல்லது சியுஐ (GUI) கியூ.டி(Qt) நிரலகத்தை கொண்டு எழுதப்பட்டது. கியூ.ஜிஐஎஸ், சி++ மற்றும் பைத்தான் மொழிகளில் புது நீட்சிகளை (plugins) உருவக்கி பயன்படுத்த அனுமதிக்கிறது. கியூ.டி(Qt) தவிர கியூ.ஜிஐஎஸ், சி இஓஎசு (GEOS), எசு.கியூ.லைட் (SQLite) ஆகிய மென்கல நிரலகங்களைச் சார்ந்துள்ளது. சிடிஏஎல் (GDAL), கிராசு ஜிஐஎஸ் (GRASS GIS, போசிட்டு.சி.ஐஎசு (PostGIS), மற்றும் போஸ்கிரெஸ்குயெல் (PostgreSQL) ஆகிய மென்கல நிரலகங்கள் பரிந்துரைக்கப்படுபவை ஆகும்.
உரிமம்[தொகு]
கியூ.ஜிஐஎஸ் ஓர் இலவச மென்கலனாக குனூ பொது உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது. இதை பயன்பாட்டிற்குத் தகுந்தாற்போல் மாற்றி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. மேலாக இதன் நீட்சிகளைக் கொண்டும் இதன் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.
நடைமுறைச் சாருமை[தொகு]
கியூ.ஜிஐஎஸ் போசிட்டு.சி.ஐஎசு (PostGIS), கிராசு (GRASS), மற்றும் மேப்செர்வர் (MapServer) போன்ற இதர இலவச பொதிகளுடன் இணைந்து செயல்படும் வல்லமை படைத்தது. இதன் கிராசு (GRASS) நீட்சி கிராசு பொதியின் செயல்பாட்டை மற்ற பொதிகளுடன் இணைந்து ஒரு முழுமையான ஜிஐஎஸ் (GIS) மென்கலமாகச் செயல்படுத்த உதவுகிறது.
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் குவாண்டம் ஜிஐஎஸ் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Quantum GIS இணையதளம்