குவானிடின்
| குவானிடின் Guanidine |
|
|---|---|
|
Guanidine |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | CH5N3 |
| மோலார் நிறை | 59.07 g/mol |
| உருகுநிலை |
50 °C |
| காரத்தன்மை எண் (pKb) | 1.5 |
| தீநிகழ்தகவு | |
| EU Index | Not listed |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | Guanidinium chloride Nitroguanidine |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
குவானிடின் (Guanidine) என்பது காரத்தன்மை கொண்ட படிகப் பொருளாகும். மரபிழையாகிய டி.என்.ஏ, ஆர்.என்.ஏவில் உள்ள நியூக்ளிக் காடிகளில் உள்ள நான்கு அடிக்கூறுகளில் ஒன்றான குவனைன் (Guanine) ஆக்சிசனேற்றமடைவதன் மூலம் இது கிடைக்கும். இது நெகிழிப்பொருள்கள் (பிளாஸ்டிக்) மற்றும் வெடிமருந்து படைப்பதிலும் பயன்படுகிறது. மனித உடலில் புரத வளர்சிதைமாற்றத்தால் உண்டாகும் இது மனிதச் சிறுநீரில் வழக்கமாகக் காணப்படுகிறது.
குவானிடிய நேர்ம மின்னணு (நேர் அயனி) [தொகு]
இயல்பான உடலியங்கல் சூழல் குவானிடியம் நேர்மின்னி (புரோட்டான்) ஏற்றம் அடைந்து, குவானிடிய நேர்ம மின்னணுவாக (நேர் அயனியாகக்) [CH6N3]+ என்பதாகக் காணப்படும். இது +1 மின்தன்மையுடையது. இதன் காடி எண் அல்லது காடி மின்பிரிவாகும் எண், pKa, மதிப்பு 12.5.
குவானிடிய வழிப்பெறுதிகள் [தொகு]
குவானிடிய வழிப்பெறுதிகள் (R1R2N)(R3R4N)C=N-R5 எனும் பொது வாய்பாடை உடையவை. இவற்றில் உள்ள முக்கியப் பிணைப்பு இமைன் தொகுதி ஆகும். இயற்கையில் காணப்படும் இருபதுஅமினோ அமிலங்களுள் ஒன்றான அர்ஜினைன் ஒரு குவானிடிய வழிப்பெறுதியே ஆகும். குவானிடிய உப்புகள் புரதங்களை இயல்பிழக்கச் செய்யும் (denaturation) தன்மை ஊடையவை. குவானிடியம் குளோரைடு இவற்றுள் மிகப் பயனுடையது.
மாற்று எரிபொருள் [தொகு]
தற்பொழுது குவானிடின் மாற்று எரிபொருளாகக் (alternate fuel) கருதப்படுகிறது. வினையூக்கியின் முன்னிலையில் ஒரு மூலக்கூறு தனிக்கார குவானிடின் இரு மூலக்கூறு நீருடன் இணைந்து மூன்று மூலக்கூறு அம்மோனியா மற்றும் ஒரு மூலக்கூறு கார்பன் டை ஆக்சைடைத் தருகிறது. இந்த அம்மோனியா அகஎரி இயந்திரங்களில் நேரடி எரிபொருளாகவோ அல்லது நைதரசன் மற்றும் ஹைதரசனாகச் சிதைவடையச் செய்தோ எரிபொருள் கலங்களில் (fuel cells) பயன்படுத்தப்படலாம்.