குவாண்டம் எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குவாண்டம் எண் (Quantum Number) என்பது குவாண்டம் தொகுதியின் இயங்கியலில், தொடர்புள்ள பெறுமானங்களை விபரிக்கும் எண் ஆகும். இவ்வெண்கள் சிறப்பாக அணுக்களிலுள்ள இலத்திரன்களின் ஆற்றல்களைக் குறிக்கின்றன. ஆனால், இவை கோண உந்தம், சுழற்சி ஆகியவற்றையும் குறிப்பன. எந்தவொரு குவாண்டம் தொகுதியும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட குவாண்டம் எண்களைக் கொண்டிருக்கலாம். அதனால், இருக்கக்கூடிய எல்லாக் குவாண்டம் எண்களையும் பட்டியலிடுவது பயனற்ற வேலையாகும்.

எத்தனை குவாண்டம் எண்கள்?[தொகு]

ஒரு குவாண்டம் தொகுதியை விபரிப்பதற்கு எத்தனை குவாண்டம் எண்கள் தேவை என்பதற்குப் பொதுவான விடை எதுவும் கிடையாது. எனினும் ஒரு தொகுதியைப் பற்றி முழுமையாகப் பகுப்பாய்வு செய்வதற்கு, அத்தொகுதி தொடர்பில் எத்தனை குவாண்டம் எண்கள் உள்ளனவென்ற தகவல் தேவைப்படும். எந்தவொரு குவாண்டம் தொகுதியும் குவாண்டம் ஹமில்ட்டோனியன் H என்பதால் விபரிக்கப்படும். தொகுதி ஒன்றின் ஒரு குவாண்டம் எண் ஆற்றல் தொடர்பானது. அது ஹமில்டோனியனின் ஈஜென்பெறுமானம் ஆகும். அத்துடன் ஹமில்ட்டோனியனுடன் தொடர்புள்ள ஒவ்வொரு இயக்கி O க்கும் ஒரு குவாண்டம் எண் உண்டு. ஒரு தொகுதி கொண்டிருக்கக்கூடிய குவாண்டம் எண்கள் இவையே.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குவாண்டம்_எண்&oldid=1350160" இருந்து மீள்விக்கப்பட்டது