குழாய்வேலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) குழாய் சீர் செய்தல் என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
ஒரு கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ள சிக்கலான குழாய்வேலை

குழாய்வேலை என்பது, கட்டிடங்களில் நீர்வழங்கல், கழிவகற்றல் போன்றவற்றுக்காகக் குழாய்களையும், அவற்றோடிணைந்த பொருத்துபொருட்களையும் பொருத்துதல் அவற்றைப் பேணுதல், பழுதுபார்த்தல் என்பவற்றை உள்ளடக்கிய திறன்சார் தொழில் துறை ஆகும். இன்றைய நகர வாழ்க்கை முறையில், நீர்வழங்கல், கழிவகற்றல் போன்றவை இன்றியமையாத பங்கு வகிப்பதால், குழாய்வேலை தற்காலப் பொருளாதாரத்தின் முக்கியமான ஒரு துறையாக விளங்குகிறது. பொதுவாகக் குழாய்வேலை எனும்போது அது ஒரு கட்டிடம் தொடர்பான குழாய்வேலையையே குறிக்கிறது. பல கட்டிடங்களிடையே அல்லது ஒரு குடியேற்றம், நகரம் என்பவை தொடர்பில் நீர்வழங்கல், வடிகாலமைப்பு போன்றவற்றுக்கான குழாய்களை அமைத்தல் "குழாய்வேலை" என்னும் துறைக்குள் அடங்குவதில்லை.

வரலாறு[தொகு]

கி.மு 2700 ஆண்டுக் காலப் பகுதியிலேயே சிந்துவெளி நகரங்களில் தரப்படுத்திய அளவுகளைக்கொண்ட குழாய்களைப் பயன்படுத்திக் குழாய்வேலைகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர், பொதுக் குளியல் கூடங்களின் அறிமுகம், நீர்வழங்கலுக்கும் கழிவகற்றுவதற்குமான தேவைகள் அதிகரித்தமை ஆகியவற்றால் கிரேக்க, உரோம, பாரசீக, சீன நாகரிகங்களைச் சேர்ந்த நகரங்களிலும் விரிவான குழாய்வேலைகள் செய்யப்பட்டன. மிகப் பழங்காலத்திலேயே தோன்றியிருப்பினும், 19 ஆம் நூற்றாண்டு வரை குழாய்வேலைத் துறையில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருந்தது.

பொருட்கள்[தொகு]

பழங்காலத்தில் குழாய்வேலைகளுக்கான குழாய்களும், வாய்க்கால்களும், களிமண், கல், மூங்கில், ஈயம் போன்றவற்றால் செய்யப்பட்டன. இவற்றினூடாக நீரினதும், கழிவுப் பொருட்களினதும் ஓட்டம் புவியீர்ப்பு விசையையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. தற்காலத்தில் குழாய்கள், பெரும்பாலும் இரும்பு, பித்தளை, செப்பு, பிளாஸ்டிக்குப் பொருட்கள் போன்றவற்றினால் செய்யப்படுகின்றன. ஈயக் குழாய்கள் உற்பத்தியின்போதும், பயன்பாட்டின்போதும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை வெளிவிடக்கூடியன ஆதலால் தற்போது ஈயக் குழாய்கள் விரும்பப்படுவதில்லை. இன்றைய கட்டிடங்கள் நிலத்தின் மேல் பல தளங்களைக் கொண்டனவாகவும், நிலத்தின் கீழும் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை உடையனவாகவும் கட்டப்படுவதால், மேல் தளங்களுக்கு நீர்வழங்குவதற்கும், நிலக்கீழ் தளங்களிலிருந்து கழிவுநீரை அகற்றுவதற்கும் புவியீர்ப்பைப் பயன்படுத்த முடியாது. இதனால் உயர் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நீர் செலுத்திகள் (pump) பயன்படுத்தப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குழாய்வேலை&oldid=1649000" இருந்து மீள்விக்கப்பட்டது