குலக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலக்குழு (band society) என்பது மிகவும் எளிமையான மனித சமூக வடிவமாகும். ஒரு குலக்குழு பொதுவாக, கூட்டுக் குடும்பம் அல்லது குலம் என்பதிலும் பெரிதாயிராத ஒரு சிறிய உறவுமுறைக் குழுவை உள்ளடக்கியிருக்கும். குலக் குழுக்கள் ஒழுங்குமுறை சாராத தலைமைத்துவம் கொண்டவை. குலக்குழுவின் முதிர்ந்த உறுப்பினர்களின் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் எதிபாக்கப்படுகின்றன ஆனால் சிக்கலான சமூகங்களில் காணப்படும் சட்டங்களோ பணியாதவர்களைப் பணியவைப்பதற்கான முறைகளோ கிடையாது. குலக்குழுக்களின் வழமைகள் எப்பொழுதும் வாய்வழியாகவே கையளிக்கப்படுகின்றன. ஒழுங்கமைவான நிறுவனங்கள் எதுவும் எரா அல்லது மிகக் குறைவாக இருக்கக்கூடும். சமயம் பொதுவாகக் குடும்ப மரபு, தனிப்பட்ட அனுபவம், அல்லது shaman இடமிருந்தான ஆலோசனையை அடியொற்றி இருக்கும். குலக்குழுச் சமூகங்கள் வழக்கமாக உணவுக்காக வேட்டை மற்றும் சேகரித்தலை மேற்கொள்வர்.

குலக்குழுக்கள் அளவின் அடிப்படையில் பழங்குடிகளிலிருந்து வேறுபடுகிறார்கள். பழங்குடிகள் பொதுவாகப் பல குடும்பங்களைக் கொண்ட பெரிய கூட்டத்தினராவர். பழங்குடிகள் குடித்தலைவன் (chieftain) அல்லது முதியோர்கள் போன்ற கூடுதலான சமூக நிறுவனங்களைக் கொண்டவர்கள். பழங்குடிகள் குலக் குழுக்களிலும் நிலையானவை; ஒரு சிறிய குழுவினர் விலகிவிடுவதன் மூலம் ஒரு குலக்குழு இல்லாது போய்விடலாம். உண்மையில் பல பழங்குடிகள், குலக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள்.

நவீன தேசிய அரசுகள் உலகின் எல்லா மூலைகளுக்கும் பரவுவதன் காரணமாக இன்று உண்மையான குலக்குழுக்கள் மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளன. வட அமெரிக்காவின் வடபகுதியில் வாழும் இனுயிட்கள், Great Basinஇன் சோஷோன்கள், தெற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த புஷ்மென்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் என்பவர்கள் முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலக்குழு&oldid=3384870" இலிருந்து மீள்விக்கப்பட்டது