குறமகள் இளவெயினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குற மகள் இளவெயினியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குறமகள் இள எயினி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 157 எண் கொண்ட பாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இவரது பெயர் குறமகள் குறியெயினி என்னும் புலவரின் பெயர் அமைப்பைப் போன்றது.

பொருளடக்கம்

புறநானூறு 157 சொல்லும் செய்தி [தொகு]

ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

ஏறை [தொகு]

ஏறு என்னும் பெயர் கொண்ட இந்த ஊர் இக்காலத்தில் 'காளையார் கோயில்' என்னும் பெயருடன் வழங்கப்படுகிறது.

ஏறைக்கோன் படைத்தலைவன் [தொகு]

ஏறைக்கோன் தன் படைவீரர்களைப் பழிக்கமாட்டான். தான் முன்னின்று போர்புரிந்து வெல்வான்.

ஏறைக்கோன் தூதன் [தொகு]

பகை வேந்தர்களின் அவையில் அஞ்சாது நடக்கும் ஆண்மை நிறைந்தவன்.

ஏறைக்கோன் பண்புகள் [தொகு]

தன்னைச் சார்ந்தவர்கள் தனக்குத் தப்பு செய்தால் அதனை ஏறைக்கோன் பொறுத்துக்கொள்வான். பிறர் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காகத் தான் நாணுவான். அவர்கள் செய்யும் தவற்றினுக்குத் தானும் ஒரு காரணம் என்று எண்ணும் மனப்பாங்கு உள்ளவன்.

குறவர் பெருமகன் [தொகு]

மலைவாழ் குடிகளைக் குறவர் என வழங்குதல் சங்ககால வழக்கம். ஏறைக்கோனைக் குறவர் பெருமகன் என்று புலவர் குறிப்பிடுவதால் இவன் மலைசார் மக்களின் தலைவன் எனத் தெரிகிறது.

சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
அள்ளூர் நன்முல்லையார் | ஆதி மந்தியார் | ஒக்கூர் மாசாத்தியார் | ஓரம்போகியார் | ஔவையார் | கச்சிப்பேட்டு நாகையார் | கழார்க் கீரன் எயிற்றியார் | காக்கை பாடினியார் நச்செள்ளையார் | காவற்பெண்டு | காமக்கணி பசலையார் | குறமகள் இளவெயினியார் | குறமகள் குறிஎயினியார் | குமிழி ஞாழலார் நப்பசலையார் | நக்கண்ணையார் | நன்னாகையார் | நெடும்பல்லியத்தை | பக்குடுக்கை நன்கணியார் | பூங்கண் உத்திரையார் | பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு | பேரெயில் முறுவலார் | பேயார் | பேய்மகள் இளவெயினியார் | பொதும்பில் புல்லாளங் கண்ணியார் | பொன்முடியார் | மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் | மாரிப்பித்தியார் | மாறலோகத்து நப்பசலையார் | முள்ளியூர்ப் பூதியார் | வருமுலையாரித்தி | வெறியாடிய காமக் கண்ணியார் | வெள்ளி வீதியார் | வெண்ணிக் குயத்தியார் | வெண்மணிப் பூதியார்
பா    தொ
"http://ta.wikipedia.org/w/index.php?title=குறமகள்_இளவெயினி&oldid=791915" இருந்து மீள்விக்கப்பட்டது