குற்றாலநாதர் கோயில்
குற்றாலநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி மாவட்டம் , குற்றாலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.
பொருளடக்கம் |
கோயில் அமைப்பு[தொகு]
இக்கோயில் பிறகோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையாது சங்கு வடிவில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பாகும்.
- இறைவன் - குற்றாலநாதர் - திரிகூடநாதர்
- இறைவி - குழல்வாய் மொழியம்மை
- திருஞான சம்பந்தர் தேவார பதிகம்
- வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
- கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்
- அம்பானெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
- நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்.
குற்றால மகிமை[தொகு]
சிவ தலங்களுள் பஞ்சசபைகளில் இது சித்திரசபை எனப்படும்.
பாடல்கள்[தொகு]
- சுற்றாத வூர்தோறுஞ் சுற்றவேண்டாம் புலவீர்
- குற்றால மென்றொருகாற் கூறினால்- வற்றா
- வடவருவியான் மறுபிறவிச் சேற்றில்
- நடவருவி யானே நமை.
- திருநாவுக்கரசு நாயனார் திரு அங்கமாலை
- உற்றா ராருளரோ - உயிர்
- கொண்டு போம் போழுது
- குற்றாலத்துறை கூத்தனல் லானமக்
- குற்றா ராருளரோ.
- மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவாசகம்
- திருப்புலம்பல் -சிவானந்த முதிர்வு
- உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
- கற்றாரை யான்வேண்டேன் கற்பனவு மினியமையுங்
- குற்றாலத் தர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
- கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.
- பட்டினத்தார்
- காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
- பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே
- உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
- குற்றாலந் தானையே கூறு.
பராசக்தி பீடம்[தொகு]
குற்றாலநாதர் மூலவரின் வடதிசையில் அருபத்துநான்கு சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம் எனப்படும் பராசக்தி பீடம் சிறுகோயில் உள்ளது. இதுசிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயம். இங்குபராசக்தி அரி, அயன், அரன் மூவரையும் பயந்தாள் இவள் சன்நிதானத்தில் தானுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கோண்டே இருக்கிறது.
புராணம்[தொகு]
திருமால் சிவன் ஆனது திருவிளையாடல் புராணம்
- கயிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயந்தது. இறைவன் அகத்தியரை நோக்கி தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் பொதிகையில் வாழக்கடவாய் என ஆணையிட்டார்.
அப்போது முனிவர் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தயும் திருநடனத்தையும் காண இயலாதே என வருந்த இறைவன் திரிகூடமலையின் மகிமையை கூறி அங்கு விஷ்ணுவாயிருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூசித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் கானலாம் என் கூறி அனுப்பி வைத்தார்.
அகத்தியரும் அவ்வாரே தென்திசை சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுள் சென்று விஷ்னுவை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது.
நன்நகரப்பெருமாள்[தொகு]
வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை கானாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். முனுவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்க்கு மூலையில் வைத்து பூசைசெய்யுங்கள் அரியும் சிவனும் ஒன்றே வேறுபாடு காட்டாதீர்கள் என உரைத்தார்.
- முத்தனே முளரிக்கண்ணா மூலமென்றழைத்த வேழப்
- பத்தியி னெல்லைகாகும் பகவனெ திகிரியாளா
- கத்தனே யருள்சூற்கொண்டகந்தரக் கருப்பினானே
- நத்தணி செவியகோல நாடுதற் கரியநம்பி
- என்று சிவனுக்கும் விஷ்னு வுக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லி பாடி கோயிலுள் சென்றனர்.
தைலமுழுக்கு[தொகு]
அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்க்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது. இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட மகாசந்தனாதித்தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது.
- குற்றாலநாதருக்கு வற்றாக் குடிநீரும் மாறாத் தலையிடியும்
- எனும் சொல் வழக்கு உள்ளது
கோயிலின் தொன்மை[தொகு]
மாணிக்கவாசகர் கி பி மூன்றாம் நூற்றாண்டு காலத்தவர் என்பதால் இத்தலம் அதற்கும் முந்தையது ஆகும்.
கி.பி. 10 ம் நூற்றாண்டு முதல் 17 ம் நூற்றாண்டு வரை பல கல்வெட்டுக்கள் உள்ளன.
ஆதாரம்[தொகு]
- திருக்குற்றாலத் தல வரலாறு கோயில் வெளியீடு தர்மகர்தர் ஷண்முகந்யினார் எழுதியது நான்காம் பதிப்பு ஆண்டு 1951