குறிச்சியா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குறிச்சியா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | கேரளா, தமிழ்நாடு | |
| பேசுபவர்கள்: | 29,375 (1981) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் வகைப்படுத்தாத் திராவிடம் குறிச்சியா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | kfh | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
குறிச்சியா மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரளாவில், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களிலும், தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்திலும் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 29,375 மக்களால் பேசப்படுகிறது.
கோவோகன், குறிச்சியார், குருச்சன் போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இம்மொழி பேசியோரில் பலர் இதனைக் கைவிட்டு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளுக்கு மாறிவருவதாகக் கூறப்படுகின்றது. இதனால் இம்மொழி அழியும் ஆபத்து உள்ள மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.