குருசாமி சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சிராபுரம் சு. வை. குருசாமி சர்மா (ஸு. வை. குருஸ்வாமி சர்மா) ஒரு தமிழ்ப் புதின எழுத்தாளர். 1888 இல் இவர் எழுதிய ”பிரேம கலாவதீயம்” என்னும் புதினம் 1893 ஆம் ஆண்டு வெளியானது. தமிழில் வெளியான முதல் சில புதினங்களுள் இது ஒன்று. இப்புதினத்தில் சர்மா, திருச்சி அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தின் சமூக நிலையைக் களமாகக் கொண்டுள்ளார். பிரேமன் எனும் சிறுவனின் வாழ்க்கை, சிற்றன்னையின் கொடுமை, பிராமணர்களின் வாழ்க்கை முறை, கிராம வாழ்க்கை முறை ஆகியவை இப்புதினத்தின் கருபொருட்களாக உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருசாமி_சர்மா&oldid=1038504" இலிருந்து மீள்விக்கப்பட்டது