குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்டோரியாவில் உள்ள கான்னர்ஸ் குன்று

குன்று என்பது அதனைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகின்ற ஒரு நில அமைப்பாகும். குன்றுகள் பெரும்பாலும் ஒரு உச்சியை உடையனவாக உள்ளன. எனினும், உச்சி எதுவும் இல்லாமலேயே உயர்வான தட்டையான நிலப்பகுதியையும் குன்று என அழைப்பது உண்டு.

குன்று, மலை என்பவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் தெளிவாக இல்லை. எனினும், குன்று மலையைவிட உயரம் குறைந்ததாகவும், சரிவு குறைந்ததாகவும் இருக்கும். ஐக்கிய இராச்சியத்தில் புவியியலாளர்கள், கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டருக்கு (1,000 அடி) மேற்பட்ட உயரம் கொண்ட குன்றுகளையே மலை எனக் கருதி வந்துள்ளனர். ஆனால், குன்றில்நடப்போர், கடல் மட்டத்திலிருந்து 610 மீட்டர்களுக்கு (2,000 அடி) மேற்பட்டவற்றையே மலை எனக் கொள்கின்றனர். ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியும் 610 மீட்டர்கள் உயரத்துக்கு மேற்பட்டவையே மலை எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஒக்லஹோமா, பொட்டேயுவில் உள்ள கவானல் குன்று உலகின் உயரமான குன்று எனக் கூறப்படுகின்றது. இதன் உயரம் 1,999 அடி ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குன்று&oldid=1500498" இருந்து மீள்விக்கப்பட்டது