குந்தாபுரா (கருநாடகம்)

ஆள்கூறுகள்: 13°48′N 74°42′E / 13.80°N 74.7°E / 13.80; 74.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குந்தாபுரா (கர்நாடகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குந்தாபுரா
ಕುಂದಾಪುರ Kundapura
—  நகரம்  —
மேல் இருந்து வலப்பக்கம்: குந்தாபுரா ஆறு, பிரதான சாலை, கொல்லூர் மூகாம்பிகா கோயில், சாஸ்திரி வட்டம், ஆனெகுட்டெ விநாயகா கோயில், தென்னை மரம்.
மேல் இருந்து வலப்பக்கம்: குந்தாபுரா ஆறு, பிரதான சாலை, கொல்லூர் மூகாம்பிகா கோயில், சாஸ்திரி வட்டம், ஆனெகுட்டெ விநாயகா கோயில், தென்னை மரம்.
குந்தாபுரா
ಕುಂದಾಪುರ Kundapura
இருப்பிடம்: குந்தாபுரா
ಕುಂದಾಪುರ Kundapura

, கருநாடகம்

அமைவிடம் 13°48′N 74°42′E / 13.80°N 74.7°E / 13.80; 74.7
நாடு  இந்தியா
பகுதி துளுநாடு
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் உடுப்பி
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
நகராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி குந்தாபுரா
ಕುಂದಾಪುರ Kundapura
மொழிகள் கன்னட
வட்டார மொழிகள் குண்டகன்னட


அஞ்சல் எண் : 576 201
வாகன பதிவு எண் வீச்சு : KA:20
தொலைபேசி குறியீடு(கள்) : 91-8254xxx



பெரிய நகரம் உடுப்பி
பிராக்மாவரா
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

23.06 சதுர கிலோமீட்டர்கள் (8.90 sq mi)

80 மீட்டர்கள் (260 அடி)

இணையதளம் www.kundapurtown.gov.in


குந்தாபுரா (கன்னடம்:ಕುಂದಾಪುರ) (ஆங்கிலம்:Kundapura) என்பது இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம் ஆகும். இந்த நகரத்தை குந்தாபுரா நகராட்சி மன்றம் நிர்வகிக்கிறது. மேலும் இந்த நகரின் வட்டாட்டாச்சியும் குந்தாபுரா நகரேயாகும்.[1]

வரலாறு[தொகு]

குந்தாபுரா நகரம் இப் பெயர் இப் பகுதியை ஆட்சி செய்த குந்தாவர்மா மன்னரின் பெயரிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். மேலும் பஞ்சகங்கவள்ளி ஆற்றின் அருகே குந்தாவர்மனால் கட்டப்பட்ட குந்தேசுவர் கோயிலைக் காணலாம். கன்னடத்தில் குந்தா என்றால் தூண் என்றும் புரா என்றால் நகரம் என்று பொருள்.[2] தூண்களின் மூலம் கட்டப்படும் வீடுகள் பாரம்பரிய முறையை குறிக்கிறது. குந்தாபுரா நகரின் மூன்று பக்கங்களிலும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. வடக்கே பஞ்சகங்கவள்ளி ஆறும், கிழக்கே கலா​​கர் ஆறு உள்ளது. மேற்கே கொடியில் கடற்கழி மற்றும் அரபிக்கடலால் சூழ்ந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001 ஆம் ஆண்டின் படி இந்த நகரில் 30,444 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 14,840 ஆண்களும், 15,604 பெண்களும் ஆவார்கள். குந்தாபுரா நகர மக்களின் சராசரி எழுத்தறிவு 92% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94%, பெண்களின் கல்வியறிவு 88% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. குந்தாபுரா நகர மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 2,614 பேர் ஆவார்கள்.

போக்குவரத்து[தொகு]

குந்தாபுரா நகரின் வழியாக இந்தியாவின் மும்பை அருகே உள்ள பன்வேல் நகரையும், கேரளாவில் உள்ள கொச்சி நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 17 இந்த நகரின் வழியே அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையானது நகரங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நகரங்களையும் இணைக்கிறது. மேலும் குந்தாபுரா நகரிலிருந்து சுமார் 87 கிலோமீட்டர் (54 மைல்) தொலைவில் மங்களூர் சர்வதேச விமான நிலையம் உள்ளது. மேலும் மும்பை இருந்து மங்களூர் வழியாக இயங்கும் கொங்கண் இருப்புப்பாதை, இணைக்கப்பட்டுள்ளது. இதன் தொடருந்து நிலையம் நகரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் (2.5 மைல்) துலைவில் உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "குந்தாபுரா நகரின் வரலாற்றுக் குறிப்புகள்" (in கன்னடம் மற்றும் ஆங்கிலம்). கர்நாடக அரசு. Archived from the original on 2014-06-27. பார்க்கப்பட்ட நாள் மே 31, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  2. பெர்டின்யாண்ட் கிட்டெல் (1999). கன்னடம் மற்றும் ஆங்கிலம் அகராதி. ஆசியக் கல்விச் சேவைகள். பக். 441. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0049-5. http://books.google.com/books?id=HBUsaxC61mkC&pg=RA3-PA441#v=onepage&q=&f=false. 
  3. குந்தாபுரா, கர்நாடகம், (2001), 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை, குந்தாபுரா நகரம், உடுப்பி மாவட்டம், கர்நாடகம்.: இந்திய அரசு, பார்க்கப்பட்ட நாள் மே 1 , 2014 {{citation}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)

வெளியிணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
குந்தாபுரா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தாபுரா_(கருநாடகம்)&oldid=3806351" இலிருந்து மீள்விக்கப்பட்டது