குட்டன்பேர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குட்டன்பேர்க்

ஜொஹானேஸ் குட்டன்பேர்க் (Johannes Gutenberg) ஜெர்மனியில் மைன்ஸ் (Mainz) என்னுமிடத்தில் பிறந்தார். (பிறப்பு: 1398 - இறப்பு: பெப்ரவரி 3, 1468). இவரே அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஜெர்மனியரான குட்டன்பேர்க் தமது அச்சியந்திரப் பரிசோதனையை 1439 களில் நடத்தினார். 1450 - 1455 கும் இடைப்பட்ட காலத்தில் அச்சிடப்பட்டவற்றில் விவிலியமும் (Bible - (''Biblia Sacra'')) அடங்கும். இந்த விவிலியம் ஒருபக்கத்தில் 46 வரிகளைக் கொண்டதாக அமைந்தது. விவிலியம் இவர்மூலம் அச்சேறப்பெற்றதால் இன்றும் "குட்டன்பேர்க் விவிலியம்" (Gutenberg Bible) என்று அழைக்கப்படுகிறது. 1450 இல் அவரது சொந்த அச்சகத்தில் "ஜெர்மானியக் கவிதைகள்" (German poem) அச்சிடப்பட்டன. இவ்வாறே அச்சியந்திரத்தின் அறிமுகம் உலகுக்குக் கிடைத்தது. அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குட்டன்பேர்க்&oldid=1386656" இருந்து மீள்விக்கப்பட்டது