குச்சக் காப்பாளர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper) துடுப்பாட்ட விளையாட்டில் குச்சங்களுக்கு மற்றும் நிகழ் மட்டையாளரின் பின்னால் நின்று களத்தடுப்பு செய்யும் துடுப்பாட்டக்காரராகும். களத்தடுப்பு அணியில் இவருக்கு மட்டுமே கையுறைகள் அணியவும் கால்களின் வெளியே தடுப்புமட்டை அணியவும் அனுமதிக்கப்பட்ட ஆட்டக்காரர் ஆவார்.[1]
இது ஓர் சிறப்பு களத்தடுப்புப் பணியாகும். சிலநேரங்களில் இவர் பந்து வீசும்போது மற்றொரு ஆட்டக்காரர் இவரது இடத்தில் தற்காலிகமாக களத்தடுப்பு செய்வார். இவரது செயலாக்கம் துடுப்பாட்ட விதிகளின் 40வது சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.[2].