கிழக்கு மாகாணம், இலங்கை
| கிழக்கு மாகாணம் Eastern Province නැගෙනහිර පළාත |
|||
|---|---|---|---|
|
|||
| இலங்கையில் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| அமைப்பு | 1 அக்டோபர் 1833 | ||
| மாகாணம் | 14 நவம்பர் 1987 | ||
| தொகுதி | திருக்கோணமலை | ||
| Boroughs |
பட்டியல்
|
||
| அரசு | |||
| - ஆளுனர் | மொகான் ஜயவிக்கிரம | ||
| - முதலமைச்சர் | நஜீப் அப்துல் மஜீத் | ||
| பரப்பளவு [1] | |||
| - மாகாணம் | |||
| - நிலம் | |||
| - நீர் | 6.35% | ||
| மக்கள் தொகை (2007)[2][3][4] | |||
| - மாகாணம் | 1 | ||
| - அடர்த்தி | |||
| அஞ்சல் குறியீடு | 30000-32999 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 026, 063, 065, 067 | ||
| அதிகாரபூர்வ மொழிகள் | தமிழ், சிங்களம் | ||
| இணையத்தளம்: Eastern Provincial Council | |||
இலங்கையின் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லைவரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது.
இலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு 2006 அக்டோபர் 16 ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.
இந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குவதாலும், மாகாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக 30% முஸ்லிம்களாக இருப்பதாலும் தீர்வு விடயத்தில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது.
பொருளடக்கம் |
புவியியல் [தொகு]
கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட 9.996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1] இது வடக்கே வட மாகாணம், கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கே தென் மாகாணம், மற்றும் மேற்கே ஊவா மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
இம்மாகாணத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் கடற் காயல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் மட்டக்களப்பு வாவி, கொக்கிளாய் வாவி, உப்பாறு, உல்லைக்கழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
நிருவாக அலகுகள் [தொகு]
கிழக்கு மாகாணம் 3 மாவட்டங்களாகவும், 45 பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகவும், 1,085 கிராமசேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
| மாவட்டம் | பி.செ பிரிவுகள் | கி.சே பிரிவுகள் |
பரப்பளவு[1] (கிமீ2) |
மக்கள்தொகை[2][3][4] | |
|---|---|---|---|---|---|
| மொத்தம் (2007 அண்.) |
அடர்த்தி (/கிமீ2) |
||||
| அம்பாறை | 20 | 507 | 4,415 | 610,719 | 138.33 |
| மட்டக்களப்பு | 14 | 348 | 2,854 | 515,857 | 180.75 |
| திருகோணமலை | 11 | 230 | 2,727 | 334,363 | 122.61 |
| மொத்தம் | 45 | 1,085 | 9,996 | 1,460,939 | 146.15 |
முக்கிய நகரங்கள் [தொகு]
| நிலை | நகரம் | மாவட்டம் | மக்கள்தொகை (2012 அண்.)[5] |
|---|---|---|---|
| 1 | கல்முனை | அம்பாறை மாவட்டம் | 106,783 |
| 2 | திருக்கோணமலை | திருகோணமலை மாவட்டம் | 99,135 |
| 3 | மட்டக்களப்பு | மட்டக்களப்பு மாவட்டம் | 92,332 |
| 4 | காத்தான்குடி | மட்டக்களப்பு மாவட்டம் | 40,883 |
| 5 | ஏறாவூர் | மட்டக்களப்பு மாவட்டம் | 25,582 |
| 6 | அம்பாறை | அம்பாறை மாவட்டம் | 20,309 |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Department of Census & Statistics Statistical Abstract 2007 (Area & Climate)
- ↑ 2.0 2.1 Department of Census & Statistics Special Enumeration 2007, Ampara
- ↑ 3.0 3.1 Department of Census & Statistics Special Enumeration 2007, Batticaloa
- ↑ 4.0 4.1 Department of Census & Statistics Special Enumeration 2007, Trincomalee
- ↑ "Sri Lanka: largest cities and towns and statistics of their population". World Gazetteer.
| இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
| மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
| மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை | |