கீழ்வெண்மணிப் படுகொலைகள்
கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள்[1] [2] [3] தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில் கீழ்வெண்மணிக்குள் நுழைகிற இடத்தில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். இதன் போது 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்து கொல்லப்பட்டனர்.
வேளாண் தொழிலாளிகளான இவ்வூர் மக்கள், தாங்கள் அறுவடை செய்யும் வயல்களுக்கு கூலியாக தரும் ஒரு படி நெல்லில் இருந்து இரு படி நெல் தரவேண்டும் என வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கிழார்கள் இப்போராட்டத்தை ஒடுக்க, அடியாட்களை ஏவினர். அவர்கள் கீழ வெண்மணிக்கு சென்று கலவரங்களில் ஈடுபட்டனர். கலவரத்தின் போது, பாதுகாப்பு தேடி ஒரு குடிசையில் ஒளிந்த இருபது பெண்களும், 19 குழந்தைகளும் குடிசைக்குத் தீவைத்து எரித்து கொல்லப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது தி.மு.க வை சேர்ந்த அண்ணா ஆட்சியில் இருந்தார். இந்நிகழ்வு இந்தியா முழுவதிலும் மட்டுமின்றி, உலகளவிலும் சீன ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டது. இவ்வழக்குக்கு அறமன்ற நடுவராக இருந்த நடுவர் செ. மு. குப்பண்ணன் நிலக்கிழார்கள் குற்றம் இழைத்தார்கள் என தீர்ப்பு வழங்கினார்[4].
இதற்குப் பின்னர் நடந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு பொதுவுடைமை கட்சிகள் தலைமை தாங்கின. மிகையாக பங்குகொண்ட கலப்பாளை சேர்ந்த குப்பு என்பவரை நஞ்சு கொண்டு சிறையில் கொன்ற நிகழ்வும், எரிப்பு நிகழ்வு நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், சித்தமல்லி முருகையன் ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும்) வெட்டி கொல்லப்பட்ட நிகழ்வும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
தஞ்சை மண்ணில் ‘பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் சீனிவாசராவும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். அரை லிட்டர் நெல்லைக் கூட்டி கூலியாகக் கேட்டார்கள் விவசாயிகள். ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது.
1968 டிசம்பர் 25. கிறித்துமசு நாள். நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள். நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். தெருவொன்றின் மூலையில் ராமையன் என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீவைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.
106 பேர் கைதானார்கள். ‘இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்" என்று காவல்துறை வாதாடியது. ‘அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.
திரைப்படம் [தொகு]
இந்நிகழ்வை விளக்கி ராமையாவின் குடிசை என்று குறும்படம் வெளிவந்தது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ கீழ்வெண்மணி தியாகிகள் தினம் தினமணி
- ↑ கீழவெண்மணி தியாகிகள் தின கொடியேற்றம் தினமணி
- ↑ Frontline
- ↑ http://www.ibiblio.org/ahkitj/wscfap/arms1974/PRAXIS/1980/1/a.htm