கீரிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீரிமலை
Keerimalai
கிராமம்
கீரிமலை is located in இலங்கை
கீரிமலை
கீரிமலை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°49′0″N 80°0′0″E / 9.81667°N 80.00000°E / 9.81667; 80.00000
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவலி. வடக்கு

கீரிமலை (Keerimalai) இலங்கைத் தீவின் யாழ்ப்பாண மாவட்டத்தில் குன்றும் நன்னீருற்றும் கொண்ட ஒரு புண்ணிய தலமாகும்.[1] இங்கு வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகுலேச்சரம் சிவாலயம், கனிம நீரூற்று ஆகியன அமைந்துள்ளன.

அமைவிடம்[தொகு]

கீரிமலை யாழ்ப்பாண நகரில் இருந்து கிட்டத்தட்ட 25 கிமீ வடக்கேயும், காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் இருந்து 2 மைல் மேற்கேயும், பலாலி விமான நிலையத்தில் இருந்து 6 மைல் மேற்கேயும் அமைந்துள்ளது.[2]

கீரிமலையின் வடக்கே பாக்குநீரிணைக் கடல் உள்ளது. கிழக்கே மாவிட்டபுரம், தெற்கே கருகம்பனை, மேற்கே இளவாலை ஆகியன இதன் எல்லைக் கிராமங்களாகும்.[2] கீரிமலையின் நில மட்டம் இதன் அயல் கிராமங்களை விட சிறிது உயர்ந்துள்ளது. கடற்கரை முருகைக்கல் பூச்சிகளினால் உண்டாகும் கற்பாறைகளினால் அமைந்துள்ளது.[2]

பெயர்க் காரணம்[தொகு]

கீரிமலை நீரூற்று

இங்குள்ள நன்னீரூற்றில் (தீர்த்தத்தில்) கீரிமுகம் கொண்ட ஒரு முனிவர் தீர்த்தமாடி இங்குள்ள குன்றில் தவமிருந்து கீரிமுகம் மாறப் பெற்றார். இதனால் இத்தலம் கீரிமலை என அழைக்கப்பட்டு வருகிறது என்பது கர்ண பரம்பரைக் கதையாகும். கிபி 8-ஆம் நூற்றாண்டில் குதிரை முகத்தைக் கொண்ட மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ இளவரசி இங்கு தீர்த்தமாடித் தனக்கிருந்த குதிரை முகம் மாறப் பெற்றாள் என்றும் வரலாறு கூறுகின்றது.

இங்குள்ள கோயில்கள்[தொகு]

நகுலேசுவரமே கீரிமலையில் உள்ள முக்கிய சிவாலயம் ஆகும். இதனை விட வேறும் பல கோயில்கள் உள்ளன.[2][3]

  • நகுலேச்சரம்
  • கடற்கரைச் சித்தி விநாயகர் கோயில்
  • மாரியம்மன் கோயில்
  • குழந்தைவேற்சுவாமி சமாதிச் சிவாலயம்
  • சுப்பிரமணியர் ஆலயம்
  • காசி விசுவநாதர் கோயில்
  • கிருஷ்ணர் கோயில்

மடங்கள்[தொகு]

இங்குள்ள ஆலயங்களைத் தரிசிக்க வருவோர்க்கும், நோயாளிகள், பிதிர்க்கடன் ஆற்ற வருவோர் ஆகியோருக்காக பல மடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அவையாவன:[2]

  • சிறாப்பர் மடம்
  • வைத்தியலிங்கம் மடம்
  • கிருஷ்ணபிள்ளை மடம்
  • பிள்ளையார்கோயில் மடம்
  • நாராயணபூடர் புண்ணிய தரும மடம்
  • துறவிகளாச்சிரமம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Keerimalai". Tamilnet. 2007-10-07. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=22619. பார்த்த நாள்: 2009-01-24. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 செல்லையா, த.‎‎ (1952). "கீரிமலை வரலாறு - நூலகம்". நகுலேசுவர சனசமூக வெளியீடு. பார்க்கப்பட்ட நாள் 18-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Salt on Old Wounds: The Systematic Sinhalization of Sri Lanka’s North, East and Hill Country (2012) - Annex III (Destruction of Hindu Temples)". https://sivasinnapodi.files.wordpress.com/2012/03/86040164-salt-on-old-wounds-the-systematic-sinhalization-of-sri-lanka_s-north-east-and-hill-country.pdf. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கீரிமலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரிமலை&oldid=3757465" இலிருந்து மீள்விக்கப்பட்டது