கி. இலட்சுமண ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கி. இலட்சுமண ஐயர் (இ. ஏப்ரல் 4, 1990) கட்டுரை இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். இலங்கையில் கல்வி அமைச்சில் வித்தியாவதியாகப் பணியாற்றியவர். தமிழ்த் தேசியப் பத்திரிகைகள் நல்ல தமிழில் வெளிவரவேண்டும் என்ற ஆவலுடன் ஆலோசனைகள் வழங்கியவர்.

இந்தியத் தத்துவ ஞானம் என்ற கட்டுரைத் தொகுப்பை 1960 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். இதன் நான்காவது பதிப்பு 1987 இல் வெளிவந்தது. இந்நூலுக்கு இலங்கையில் சாகித்திய விருதும், தமிழ்நாடு அரசின் பரிசும் கிடைத்தது.

இறுதிக்காலம்[தொகு]

ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து சிட்னியில் வாழ்ந்த இவர் 1990 இல் காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._இலட்சுமண_ஐயர்&oldid=1634465" இலிருந்து மீள்விக்கப்பட்டது