கிசோர் (படத்தொகுப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிஷோர் (படத்தொகுப்பாளர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிஷோர்
Kishore Te
பிறப்பு(1978-03-24)24 மார்ச்சு 1978
வளவனூர், விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு6 மார்ச்சு 2015(2015-03-06) (அகவை 36)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்படத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2009-2015

கிஷோர் (Kishore Te, 24 மார்ச் 1978 - 6 மார்ச் 2015) தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர்.[1][2] தமிழ், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றியவர். ஆடுகளம் தமிழ்த் திரைப்படத்துக்காக இவருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.[3]

பணி[தொகு]

தன் 21 ஆம் வயதில் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், வி. டி. விஜயனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 70 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு இந்தித் திரைப்படங்களில் உதவிப் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.

இறப்பு[தொகு]

வெற்றிமாறனின் படத்தைத் தொகுத்துக்கொண்டிருக்கையில் மயங்கிவிழுந்த கிஷோரின் மருத்துவ ஆய்வில் மூளை உறைகட்டியிருப்பது கண்டறியப்பட்டது.[4] அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி 6 மார்ச் 2015 ல் உயிரிழந்தார்.[5][6]

தொகுத்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் விருது
2009 ஈரம்
2010 ஆனந்தபுரத்து வீடு
2011 ஆடுகளம் தேசிய விருது
2011 பயணம்
2011 ஆடு புலி
2011 மாப்பிள்ளை
2011 உதயன்
2011 காஞ்சனா
2011 180
2011 எங்கேயும் எப்போதும்
2012 தோனி
2012 ஆரோகணம்
2012 அம்மாவின் கைப்பேசி
2013 பரதேசி
2013 எதிர் நீச்சல்
2013 உதயம் என்.எச்4
2013 மதயானைக் கூட்டம்
2014 வெற்றிச் செல்வன்
2014 நெடுஞ்சாலை
2014 புலிவால்
2014 வானவராயன் வல்லவராயன்
2014 உன் சமையலறையில்
2015 காஞ்சனா 2
2015 காக்கா முட்டை
2015 விசாரணை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kishore Te - Facebook". facebook.com. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Review: Eeram is brilliant". Rediff. 11 September 2009. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Editor Kishore - Tamil Cinema Editor Interview - Editor Kishore - Jayendra - 180 - Aadukalam - Vetri Maaran - Behindwoods.com". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 6 March 2015.
  4. "தினமலர்"
  5. "தினத்தந்தி"
  6. "tamil.filmibeat.com"

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசோர்_(படத்தொகுப்பாளர்)&oldid=2675946" இலிருந்து மீள்விக்கப்பட்டது