கிளைக்கோசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிளைக்கோஜீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிளைக்கோசன்(Glycogen) என்பது ஒரு படித்தான பாலி சாக்கரைடு ஆகும். ஏனெனில் இது நீராற் பகுக்கப்படும்போது குளுக்கோசு அலகுகளை மட்டும் கொடுக்கிறது இது விலங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கார்போஐதரேட்டு ஆகும். கிளைகோசன் அனைத்து எலும்புத்தசை உயிரனுக்களிலும் (செல்களிலும்) கல்லீரலிலும் காணப்படுகிறது. இது நுங்குகளின் (சைட்டோபிளாஸ்மிக்) துகள்களாகக் காணப்படுகிறது. கிளைகோசன் என்பது பல கிளை வடிவ அமைப்பைக் கொண்டு, ஒவ்வொரு கிளைகளும் எட்டு முதல் பன்னிரெண்டு குளுக்கோசு மூலக்கூறுகளுக்கிடையே ஏற்படுகிறது. பசித்திருக்கும்போது கிளைகோசன் சேமிப்புத் திசுவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு கிளைகோஜன் பாசுபாரிலேசு என்ற நொதியால் குளுகோசாக மாற்றப்படுகிறது. சில வேளைகளில், நமது உடலக உயிரணுக்களுக்கு குளுக்கோசு கிடைக்காத நிலையில், கொழுப்பு பொருள்கள் ஆற்றலாக மாற்றப்படும். இம்மாற்ற நிகழ்வுக்கு புதிய குளுக்கோசு உற்பத்தி (Glconeogeneisis) எனப்படும்.இவ்வாறு குளுக்கோசு ஆக்சிசனேற்றமடைந்து ஆற்றலைத் தருகிறது. குளுக்கோசிலிருந்து கிளைகோஜன் உருவாதல் கிளைக்கோசன் ஆக்கம் என அழைக்கப்படுகிறது. கிளைக்கோசன் பிளவடைந்து குளுக்கோசாக மாறுவது கிளைக்கோசன் பகுப்பு என அழைக்கப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிளைக்கோசன்&oldid=1355065" இருந்து மீள்விக்கப்பட்டது