கிளின்ட் ஈஸ்ட்வுட்
| கிளின்ற் ஈஸ்ற்வூட் Clint Eastwood |
|
|---|---|
2010 இல் கிளின்ட் ஈஸ்ட்வுட் |
|
| இயற் பெயர் | கிளின்ற் ஈஸ்ற்வூட், யூனியர் |
| பிறப்பு | மே 31, 1930 சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா |
| தொழில் | நடிகர், இயக்குநர் |
| நடிப்புக் காலம் | 1955 இலிருந்து |
கிளின்ற் ஈஸ்ற்வூட் (கிளின்ட் ஈஸ்ட்வுட், Clint Eastwood, பி. மே 31, 1930) அமெரிக்க நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். முரட்டுத்தனமான வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். ஐந்து தடவைகள் அக்கடமி விருதினைப் பெற்ற இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த இவர் 1950 களின் நடுப்பகுதியில் திரைப்படத்துறையில் நடிகராக நுழைந்தார். 1958 இல் றோகைட் எனும் தொகைக்காட்சித் தொடரில் 'ரௌடி யேற்'சாக நடித்துப் புகழ் பெற்றார். 1959 சனவரி முதல் ஏழு ஆண்டுகள் அத்தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பானது. அத்தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டே பல திரைப்படங்களிலும் நடித்தார்.
1960 களில் தொடங்கி 1980 களின் தொடக்கம் வரை வெஸ்ரேர்ன் என அழைக்கப்படும் சாகசத் திரைப்படங்களில் இவர் நடித்தமை குறிப்பிடத்தக்கது. 1971 இலிருந்து திரைப்படங்களை இயக்கியும் வருகிறார்.
[தொகு] திரைப்படங்கள்
இவரது திரைப்படங்களில் சில:
- 1964 - எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்
- 1966 - ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்
- 1966 - தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி
- 1992 - அன்பர்கிவன்
- 2004 - மில்லியன் டாலர் பேபி
- 2006 - லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா