கிறிஸ்துமசு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிறிஸ்மஸ் தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிறிஸ்துமஸ் தீவுகள் ஆட்சிப்பகுதி
கிறிஸ்துமஸ் தீவு கொடி
நாட்டுப்பண்
Advance Australia Fair
அரச வணக்கம்
கோட் சேவ் த குயிண்
Location of கிறிஸ்துமஸ் தீவு
தலைநகரம்
பெரிய நகரம்
பிளையிங் பிஷ் கோவ் ("குடியேற்றம்")
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம் (நடப்பின் படி)
அரசு கூட்டாட்சி யாப்பு முடியாட்சி
 -  அரசி இரண்டாம் எலிசபெத்
 -  ஆத்திரேலியப் பொதுநலவாயத்தின் ஆளுநர்
குவெண்டின் பிரிசு
 -  நிருவாகி பிறையன் லேசி
 -  உள்ளூராட்சித் தலைவர் கோர்டன் தொம்சன்
அவுஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதிகள்
 -  ஆட்சி
அவுஸ்திரேலியாவுக்கு மாற்றம்

1957 
பரப்பளவு
 -  மொத்தம் 135 கிமீ² 
52 சது. மை 
 -  நீர் (%) 0
மக்கள்தொகை
 -  2009 மதிப்பீடு 1,402 (ஏப்ரல் 2009) (220வது)
 -  அடர்த்தி 10.39/கிமீ² (n/a)
26.96/சதுர மைல்
நாணயம் அவுஸ்திரேலிய டொலர் (AUD)
நேர வலயம் (ஒ.ச.நே.+7)
இணைய குறி .cx
தொலைபேசி +61

கிறிஸ்துமஸ் தீவு ஆட்சிப்பகுதி (Territory of Christmas Island) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதியாகும். இது பேர்த் நகரிலிருந்து 2600 கி.மீ. (1600 மைல்) வடமேற்கிலும் ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. (300 மைல்) தெற்காகவும் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் சில குடியேற்றங்களில் சுமார் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இங்கு காணப்படும் புவியியல் இயற்கை அமைப்பு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகும். இத்தீவிற்கே உரிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன[1]. கனிய அகழ்வு இத்தீவின் முக்கிய தொழிற்துறையாக விளங்கி வந்தது. இத்தீவின் மொத்த 135 சதுர கிலோமீட்டர் (52 சது மை) பரப்பில் 65% மழைக்காடுகளாகக் காணப்படுகின்றது.

வரலாறு[தொகு]

1643 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த ரோயல் மேரி கப்பலின் தலைவன் கப்டன் வில்லியம் மைனர்சு என்பவர் கிறிஸ்துமசு நாளில் இத்தீவைக் கடந்த போது கிறிஸ்துமசு தீவு எனப் பெயரிட்டார்[2]. 1666 ஆம் ஆண்டில் இத்தீவின் வரைபடம் டச்சு நிலப்பட வரைஞர் பீட்டர் கூஸ் என்பவரால் வெளியிடப்பட்ட நிலவரைபடத்தில் வெளியிடப்பட்டது. கூஸ் இத்தீவுக்கு மோனி எனப் பெயரிட்டார். இப்பெயர்க்காரணம் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை[3]. மார்ச் 1688 இல் பிரித்தானியக் கடற்படையைச் சேர்ந்த சிக்னெட் கப்பலைச் சேர்ந்த வில்லியம் டேம்பியர் என்பவர் இத்தீவைச் சுற்று வந்ததற்கான பதிவுகள் கிடைக்கப்பட்டன. எவரும் இத்தீவில் வசிப்பதாக அவர் காணவில்லை[4]. டேம்பியரின் கப்பலில் பணியாற்றிய இரு மாலுமிகள் இத்தீவில் முதன் முதலில் இறங்கிய மனிதர்களுக்கான பதிவுகள் கிடைக்கப்பட்டுள்ளன. டானியல் பீக்மன் என்பவர் பின்னர் சென்றதற்கான பதிவுகள் அவரது 1718 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போர்ணியோ தீவுக்கான அவரது பயண நூலில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Save Christmas Island - Introduction". The Wilderness Society (2002-09-19). பார்த்த நாள் 2007-04-14.
  2. "Department of the Environment, Water, Heritage and the Arts – Christmas Island History". Australian Government (8 சூலை 2008). பார்த்த நாள் 26 ஏப்ரல் 2009.
  3. "Digital Collections – Maps – Goos, Pieter, ca. 1616–1675. Paskaerte Zynde t'Oosterdeel Van Oost Indien (cartographic material) : met alle de Eylanden deer ontrendt geleegen van C. Comorin tot aen Iapan". National Library of Australia. பார்த்த நாள் 26 ஏப்ரல் 2009.
  4. Carney, Gerard (2006). The constitutional systems of the Australian states and territories. Cambridge University Press. p. 477. ISBN 0521863058. "The uninhabited island was named on Christmas Day 1643 by Captain William Mynors as he sailed past, leaving to William Dampier the honour of first landing ashore in 1688." 

ஆள்கூறுகள்: 10°29′S, 105°38′E


"http://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்துமசு_தீவு&oldid=1471451" இருந்து மீள்விக்கப்பட்டது