கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்
கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள் என்பது கிறிஸ்தோபர் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டில் அமெரிக்கா கண்டத்திற்குச் சென்ற ஆண்டில் இருந்து ஆரம்பிக்கின்றது. ஆரம்ப காலங்களில் ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களே ஐரோப்பியர்களால் அறியப்பட்டிருந்தன. எனினும் அறிவியல் முன்னேற்றத்தால் ஐரோப்பியர்கள் பெரும் கடற் பயணங்களை மேற்கொண்டு அவர்கள் ஏனைய கண்டங்களை அறிந்து குடியேறினர்.
[தொகு] பின்னணி
ஆரம்ப காலங்களில் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையில் பட்டுப்பாதை மூலம் வர்த்தகம் நடைபெற்றது. இப்பாதையில் ஐரோப்பாவுக்கான முக்கிய வர்த்தக நகரமாக கொன்ஸ்தாந்திநோபிள் செயற்பட்டது. 1453ம் ஆண்டில் இது துருக்கியரால் கைப்பற்றப்பட்டது. இதனால் ஐரோப்பிய வர்த்தகர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கினர். இவற்றுள்,
- உயர்விலைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டியிருந்தமை
- தீர்வைகள் உயர்த்தப்பட்டமை
- உரிய காலத்தில் பொருட்கள் கிடைக்காமை என்பனவாகும். இக்காலப்பகுதியில் ”பெஸ்டர் ஜோன்” என்ற மன்னனின் வலிமை மிக்க கிறிஸ்தவ ராச்சியத்தைப் பற்றிய எண்ணம் ஒன்று ஐரோப்பிய மக்களிடையே பரவியது. எனவே அவனது ராச்சியத்தைக் கண்டுபிடித்து முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டுமென்ற உந்துதலும் அவர்களிடையே மேலோங்கியது.
[தொகு] பயணங்களுக்கான ஆதரவு
போர்த்துக்கல்லைச் சேர்ந்த இளவரசன் ஹென்றி, ஸ்பானியாவைச் சேர்ந்த பேர்டினன், இசபெல்லா அரசி போன்றோர் இத்தகைய கடற்பயணங்களை மேற்கொள்வோருக்கு உதவ முன்வந்தனர். இதனால் இளவரசன் ஹென்றி, ”கடலோடி ஹென்றி” எனப்பட்டான். இவன் சென்ட்.வின்சன்ட் முனையில் கடற்பயணச் செயற்பாடுகளைப் பயிற்றுவிக்கும் நிலையமொன்றை நிறுவினான். கி.பி. 1419ல் நிறுவப்பட்ட இந்நிலையத்தில் படவரைஞர்கள், வானியலாளர்கள் போன்ற பலரும் பணியிலமர்த்தப் பட்டனர்.