கிர்க்லீசு

ஆள்கூறுகள்: 53°35′35″N 1°48′04″W / 53.593°N 1.801°W / 53.593; -1.801
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிர்க்லீசு பெருநகர் பரோ
பெருநகர் பரோ
Official logo of கிர்க்லீசு பெருநகர் பரோ
பரோ அவையின் மரபுவழிச் சின்னம்
இறையாண்மை நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்யார்க்சையரும் அம்பரும்
நிர்வாகக் கௌன்ட்டிமேற்கு யார்க்சையர்
நிர்வாக தலைமையிடம்அட்டர்சுபீல்டு
அரசு
 • வகைகிர்க்லீசு பெருநகர் அவை
 • மேயர்:எரிக் பிர்த்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,23,000
 • தரவரிசை11வது
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0)
 • கோடை (பசேநே)பிரித்தானிய வேனில் நேரம் (ஒசநே+1)
இணையதளம்kirklees.gov.uk

கிர்க்லீசு பெருநகர் பரோ (Metropolitan Borough of Kirklees) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் அமைந்துள்ள ஓர் பெருநகர பரோவாகும். இதன் மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பின் மதிப்பீட்டின்படி 423,000 ஆகும். இதில் பாட்லி, பிர்ஸ்டால், கிளெக்கீட்டான்,டென்பி டேல், டியூசுபரி, எக்மோன்ட்விக், ஹோல்ம்ஸ்பிர்த், அட்டர்சுபீல்டு, கிர்க்பட்டன், மார்சுடன், மேல்த்தாம், மீர்பீல்டு மற்றும் இசுலைத்வைட்டு ஆகிய குடியிருப்புப் பகுதிகள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப் பெரிய குடியிருப்புப் பகுதியாக அட்டர்சுபீல்டு உள்ளது. இப்பெருநகர பரோவின் நிர்வாக மையம் அட்டர்சுபீல்டுலேயே உள்ளது.

1974ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த உள்ளாட்சிப் பரோ பழங்கதை நாயகன் இராபின் ஊட்டின் கல்லறை இடமான கிர்க்லீசு பிரியாரியை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது. [1][2] இந்தக் கல்லறை இருந்தவிடத்தில் இன்று கிர்க்லீசு பூங்காப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 O'Leary, Patrick (8 August 1974). "Kirklees: Robin Hood brings the communities together". The Times: p. 12. 
  2. "In the footsteps of Robin Hood". History. Channel 4. பார்க்கப்பட்ட நாள் 2009-02-14.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்க்லீசு&oldid=1342984" இலிருந்து மீள்விக்கப்பட்டது