கிரேசு ஹாப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரேசு முர்ரே ஹாப்பர்
Commodore Grace M. Hopper, USN (covered).jpg
சனவரி 1984இல் ஹாப்பர்
பட்டப்பெயர் "வியத்தகு கிரேசு"
பிறப்பு திசம்பர் 9, 1906(1906-12-09)
இறப்பு ஜனவரி 1, 1992 (அகவை 85)
சார்பு  அமெரிக்க ஐக்கிய நாடு
பிரிவு  United States Navy
சேவை ஆண்டு(கள்) 1943–1966, 1967–1971, 1972–1986
தரம் US-O7 insignia.svg ரியர் அட்மிரல்
விருதுகள் Defense Distinguished Service ribbon.svg பாதுகாப்பு சீர்மிகு சேவை பதக்கம்
Legion of Merit ribbon.svg லெஜியன் ஆஃப் மெரிட்
Meritorious Service ribbon.svg சிறப்புச் சேவை பதக்கம்
American Campaign Medal ribbon.svg அமெரிக்க கேம்பெய்ன் பதக்கம்
World War II Victory Medal ribbon.svg இரண்டாம் உலகப்போர் வெற்றிப் பதக்கம்
National Defense Service Medal ribbon.svg தேசிய பாதுகாப்பு சேவை பதக்கம்
AFRM with Hourglass Device (Silver).jpg ஆயுதப்படைகளின் இருப்புப் பதக்கம் - இரு மணிப்பேழை கருவிகளுடன்
Naval Reserve Medal ribbon.svg கடற்படை இருப்பு பதக்கம்

கிரேஸ் முர்ரே ஹாப்பர் (Grace Murray Hopper, திசம்பர் 9, 1906 – சனவரி 1, 1992) அமெரிக்க கணினியியலாளரும் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் ரியர் அட்மிரலாகப் பணியாற்றியவருமாவார். கணினியிலில் ஓர் முன்னோடியாக ஆர்வர்டு மார்க் I கணினியில் பணியாற்றிய முதல் நிரலாளர்களில் ஒருவரும், கணினிகளுக்கு முதன்முதலாக நிரல்மொழிமாற்றி எழுதியவரும் ஆவார். [1][2][3][4][5] கணிப்பொறியை அடிப்படையாகக் கொள்ளாத நிரலாக்கமொழி குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கியவர் இவரே. இவரது கருத்தாக்கத்தின் வழியிலேயே உயர்நிலை கணினி நிரலாக்க மொழிகளில் முதலாவதான கோபால் (நிரலாக்க மொழி) உருவாக்கப்பட்டது.

கணினியிலிருந்து ஓர் அந்துப்பூச்சி எடுக்கப்படுவதைக் கண்ட கிரேஸ் அதனையொட்டி கணினி நிரல்களில் வழு நீக்கப்படுவதற்கு இன்று பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சி நீக்கம் எனப் பொருள்படும் டிபக்கிங் என்ற சொல்லை உருவாக்கினார். அவரது சாதனைகளையும் கடற்படை பதவியையும் கருதி சிலநேரங்களில் "வியத்தகு கிரேசு" (Amazing Grace) எனக் குறிப்பிடப்படுகிறார்.[6][7] அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று (USS Hopper (DDG-70)) இவரது பெயரைத் தாங்கி உள்ளது; இதேபோல தேசிய ஆற்றல் ஆய்வு அறிவியல் கணினி மையத்தின் மீத்திறன் கணினி கிரே XE6க்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Richard L. Wexelblat, ed. (1981). History of Programming Languages. New York: Academic Press. ISBN 0-12-745040-8. 
  2. Donald D. Spencer (1985). Computers and Information Processing. C.E. Merrill Publishing Co. ISBN 978-0-675-20290-9. 
  3. Phillip A. Laplante (2001). Dictionary of computer science, engineering, and technology. CRC Press. ISBN 978-0-8493-2691-2. 
  4. Bryan H. Bunch, Alexander Hellemans (1993). The Timetables of Technology: A Chronology of the Most Important People and Events in the History of Technology. Simon & Schuster. ISBN 978-0-671-76918-5. 
  5. Bernhelm Booss-Bavnbek, Jens Høyrup (2003). Mathematics and War. Birkhäuser Verlag. ISBN 978-3-7643-1634-1. 
  6. "Cyber Heroes of the past: "Amazing Grace" Hopper". பார்த்த நாள் December 12, 2012.
  7. "Grace Murray Hopper". பார்த்த நாள் December 12, 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரேசு_ஹாப்பர்&oldid=1570728" இருந்து மீள்விக்கப்பட்டது