கிருஷ்ணா டாவின்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணா டாவின்சி
பிறப்புவெங்கடகிருஷ்ணன்
(1968-05-07)7 மே 1968
இறப்புஏப்ரல் 4, 2012(2012-04-04) (அகவை 43)
சென்னை
இறப்பிற்கான
காரணம்
லேப்டோ பைரோஸிஸ் என்னும் எலிக்காய்ச்சல்[1]
மற்ற பெயர்கள்அகிலன் சித்தார்த், வால்பையன், கின்ஸி
பணிஇதழாளர், எழுத்தாளர்
அறியப்படுவதுஇதழாளர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
<ஜெயராணி<
பிள்ளைகள்நேயா[2]

வெங்கடகிருஷ்ணன்[3] என்னும் இயற்பெயரைக்கொண்ட கிருஷ்ணா டாவின்சி (பிறப்பு: மே 7, 1968 இறப்பு: ஏப்ரல் 4, 2012[3]) ஓர் இதழாளர், எழுத்தாளர், திரைப்பட உரையாடல் எழுதுநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர்.

சுகந்தி என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான லியானர் டோ டாவின்சியைப் போல தானும் பல்துறை வல்லுநராகத் திகழவேண்டும் என விரும்பி கிருஷ்ணா டாவின்சி என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.[4] தென்னக இருப்புப்பாதைத் துறையில் பயணச்சீட்டு ஆய்வாளாரக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். மாயக்குதிரை என்னும் இவரது முதல் தொடர்கதை கல்கி இதழில் வெளிவந்தது. அதனையொட்டிய சில நாட்களிலேயே குமுதம் இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். தமிழின் முதல் இணைய இதழான குமுதம்.காம் இதழின் முதற் பொறுப்பாசிரியர். திரைப்படத்துறையிலும் எழுத்துலகிலும் செயற்பட்டுக்கொண்டிருந்தவர். 28 புதினங்களும் 50 சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகளை எழுதியவர்.

நூல்கள்[தொகு]

  1. ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர், ஆனந்தவிகடன் வெளியீடு, சென்னை
  2. ஆஷா ஒரு புதையல், மணிமேகலைப் பிரசுரம், 1996, 168 பக்கங்கள்.[5]
  3. இசையாலானது, பாரதி புத்தகாலயம், சென்னை; 2012 ஏப்ரல்; 90 பக்கங்கள், ரூ.50/-[2]
  4. இனிய மனது இணையும்பொழுது, மணிமேகலைப் பிரசுரம், [5]
  5. இன்னொரு முறை காதலிப்போம், மணிமேகலைப் பிரசுரம், 1996, 168 பக்கங்கள்.[5]
  6. ஒரு கனவின் இசை, விகடன் பிரசுரம், ரூ.60/-
  7. காதல் சங்கிலி, மணிமேகலைப் பிரசுரம், 1996, 175 பக்கங்கள்.[5]
  8. பூவுலகின் கடைசிக்காலம், பாரதி புத்தகாலயம், சென்னை; முதற்பதிப்பு ?, 108 பக்கங்கள்; ரூ.50/-
  9. பெண் என்னும் பறவை, மணிமேகலை பிரசுரம்,[5]
  10. நான்காவது எசுடேட், குமுதம் பு(து)த்தகம், 2004, 144 பக்கங்கள், ரூ.65/-

படைப்புகள்[தொகு]

நெடுங்கதைகள்[தொகு]

  1. அடிமை 89 (1991)
  2. ஆக்டோபஸ் அதிர்ச்சிகள் (மாலைமதி 1999 - மே -5)
  3. இனிய மனது இணையும்பொழுது
  4. என் இனிய தமிழ்மக்களே!
  5. ஒரு மர்மமான மரணம் (மாலைமதி 1990-11-22)
  6. கடலோரக் கொலைகள் (மாலைமதி 1992 பிப் 2)
  7. கோடையில் ஒருமின்னல்
  8. மாயக்குதிரை
  9. வைரப்பாம்புகள் (மாலைமதி 1990 - பிப்ரவரி- 8)

சிறுகதைகள்[தொகு]

  • அச்சக்காடு
  • குட்டிமயில்
  • காலா என் காலருகே வாடா, ஆனந்தவிகடன்

தொடர்கதைகள்[தொகு]

  1. நான்காவது எசுடேட்
  2. ஸ்வேதா, 1997, குமுதம்

கவிதைகள்[தொகு]

  • லவ் பேர்ட்ஸ்

கட்டுரைகள்[தொகு]

  1. ஹைக்கூத் தீவுகள்
  2. பூட்டிய அலமாரியினுள் கவிதைப் புதையல், புதிய புத்தகம் பேசுது.
  3. சூரியனுக்குக் கீழே.., [6]

பணியாற்றிய திரைபடங்கள்[தொகு]

  • வர்ணம் (2011)
  • வயது 18 (நடிகர்)
  • சித்து ப்ளஸ் டூ. தயாரிப்பு: கே.பி.ஆர். மீடியா பிரைவேட் லிமிடெட். திரைக்கதை, வசனம், இயக்கம்: கே.பாக்யராஜ். கதை: கிருஷ்ணா டாவின்சி

இலக்கியச் சிந்தனைத் தேர்வு[தொகு]

இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்வுசெய்யப்பட்ட சிறுகதைகள்: [7]

  1. குட்டிமயில், குமுதம், 2005 ஏப்ரல்
  2. காலா என் காலருகே வாடா, 2012 ஏப்ரல்

சான்றடைவு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. எதிர்பாராமல் வந்தவர் - கிருஷ்ணாவைப் பற்றி அ.முத்துலிங்கத்தின் நினைவலைகள் பரணிடப்பட்டது 2012-06-29 at the வந்தவழி இயந்திரம்
  2. அச்சக்காடு - கிருஷ்ணா டாவின்சி சிறுகதை
  3. காலா... அருகே வாடா - கடைசிச் சிறுகதை - ஆனந்தவிகடன், 2012 ஏப்ரல் 18
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_டாவின்சி&oldid=3900784" இலிருந்து மீள்விக்கப்பட்டது